என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீலா வெங்கடேசன்"

    • பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.
    • தனது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளினால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர் பீலா வெங்கடேசன்.

    தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவரது மரணமடைந்ததை அடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் IAS அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.

     

    கொரோனா பேரிடர் காலத்தில் நான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றி, தனது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளினால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர்.

    அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பீலா வெங்கடேசன் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்.
    • ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1997-ம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் மரணம் அடைந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீலா வெங்கடேசன். இவர் வெங்கடேசன்-ராணி வெங்கடேசன் தம்பதியின் மகள். வெங்கடேசன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். ராணி வெங்கடேசன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

    பீலா வெங்கடேசன் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1997-ம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    பீகாரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேசை பீலா வெங்கடேசன் திருமணம் செய்தார். ராஜேஷ் தமிழ்நாட்டின் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால், பீலா வெங்கடேசனும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறுதல் பெற்று வந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி, சுகாதாரத்துறை செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார்.

    இந்நிலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    • கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
    • கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.

    இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

    அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட இரங்கல் பதிவில், ஐஏஎஸ் அதிகாரி திருமதி பீலா வெங்கடேசன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.

    திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக இருந்தவர் டாக்டர் பீலா வெங்கடேசன்
    • இவர் தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும் செயல்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.

    இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்தவர் பீலா ராஜேஷ்.
    • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் திறம்பட பணியாற்றியவர்.

    சென்னை:

    தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ராஜேஷ்.

    பீலாவின் தந்தையான எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி பகுதியாகும். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

    கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் திறம்பட பணியாற்றியவர்.

    சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளார்.

    • கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.
    • ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கேளம்பாக்கம்:

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

    பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.

    அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×