என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் நான்காவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
நான்காவது நாள் போற்றி
ஓம் கருணை வடிவேபோற்றி
ஓம் கற்பகத் தருவேபோற்றி
ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி
ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி
ஓம் கரும்பின் சுவையேபோற்றி
ஓம் கார்முகில் மழையேபோற்றி
ஓம் வீரத்திருமகளே போற்றி
ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி
ஓம் பகைக்குப் பகையேபோற்றி
ஓம் ஆவேசத் திருவேபோற்றி
ஓம் தீமைக்குத் தீயேபோற்றி
ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி
ஓம் நாரணன் தங்கையேபோற்றி
ஓம் அற்புதக் கோலமேபோற்றி
ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி
ஓம் புகழின் காரணியேபோற்றி
ஓம் காக்கும் கவசமேபோற்றி
ஓம் ரோகிணி தேவியேபோற்றி
- நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்.
- நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை.
அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் நேற்று சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் இருந்து கோபிசெட்டிப்பாளையத்திற்கு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் எனது மனைவியை சந்திக்க சென்றிருந்தேன்.
* சென்னை சென்றவுடன் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீட்டிற்கு திரும்பியிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை.
* நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை என்றார்.
இதனிடையே, ஒருங்கிணைப்பு பணி எந்தளவு உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யார் என்னுடன் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள், ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது என கூறினார்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் நான்காம் நாள், துர்கா தேவியின் கூஷ்மாண்டா வடிவத்தை வழிபடும் நாளாகும்.
கூஷ்மாண்டா தேவிக்கான முக்கிய மந்திரம்:
ஸ்ரீ தேவி கூஷ்மாண்டாயை நமஹ.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் சக்தி, படைப்பாற்றல் மற்றும் நிறைவான வாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
ரிஷபம்
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.
மிதுனம்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். பிரபலமானவர்களின் நட்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
சிம்மம்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
கன்னி
யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபார வளர்ச்சி உண்டு. புது முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். திருமண முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
தனுசு
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு.
மகரம்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். தொழில போட்டிகள் அகலும்.
கும்பம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் பணி உயர்வு கிடைக்கும்.
மீனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாம்.
- விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். இதனை தொடர்ந்து தனது அரசியல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்தில் விஜயின் பிரசாரத்தை தொடங்க முடியாமல் காலதாமதத்துடன் நடைபெற்றது. இதனால் அவரை காண வரும் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜயின் சுற்றுப்பயணம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 20-ந்தேதி வரை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட் ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.
தாம்பரம்: புதுத்தாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், சாய் நகர், டிடிகே நகர், பையார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, வைகை நகர், டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடக்கின்டா சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், கண்ணன் அவென்யூ, குறிஞ்சி நகர், அமுதம் நகர், நித்யானந்தா நகர், பெருமாள் தெரு, ஜோதி நகர், காந்தி நகர்.
மாடம்பாக்கம்: அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செக்ரடேரியட் காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவஞ்சேரி.
ஆயிரம் விளக்கு: அண்ணாசாலை மதர்ஷா பில்டிங் ஃபர்ஸ்ட் பாயிண்ட், கிரீம்ஸ் ரோடு, அலி டவர், எம்ஆர்எஃப், ரங்கூன் ஸ்ட்ரீட் ஃபர்ஸ்ட் பாயின்ட், அண்ணாசாலை, மகிஸ் கார்டன், ஷாபி முகமது சாலை, மெயின் அப்பல்லோ, க்ரீம்ஸ் லேன், ஸ்பென்சர் பிளாசா மால்.
செம்பியம்: தணிகாசலம் நகர், சக்தி வேல் நகர், பிரபு தெரு, 80 அடி சாலை, சக்தி விநாயகர் கோவில் தெரு, மேரி எலியன் தெரு, அன்னாள் காந்தி தெரு, தட்சிணாமூர்த்தி தெரு, ராமலிங்க காலனி, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகர், திருப்பூர் குமரன் தெரு, திரு.வி.க. தெரு, காமராஜ் நகர், ஸ்ரீனிவாஸ் நகர், ஆசீர் தெரு, காமராஜ் நகர், என். காந்திமதி தெரு.
போரூர்: குன்றத்தூர் ரோடு, காரம்பாக்கம், மதானந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.
- பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 15 லட்சம் பேர் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
- தமிழக அரசியல்வாதிகளில் நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
சென்னை:
சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதனால் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஆவார்.
விஜய்க்கு, 'இன்ஸ்டாகிராமில்' 1 கோடியே 46 லட்சம், 'பேஸ்புக்'கில் 77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒரே நபர் 3 தளங்களிலும் பின்தொடர்ந்து இருக்கக்கூடும். எனவே, மூன்றையும் சேர்த்து சராசரியாக பார்த்தால், சுமார் 93 லட்சம் பேர் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'இன்ஸ்டாகிராமில்' 18 லட்சம், 'பேஸ்புக்'கில் 31 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 1.68 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 2.95 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 15 லட்சம், 'பேஸ்புக்'கில் 5.77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 10.25 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 98 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 11 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகளில் இந்த நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.
விஜய்யை பொறுத்தவரை, அவர் ஏற்கனவே சினிமா பிரபலம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதனால், அவருக்கான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. அதேபோல் மற்ற கட்சியினர் கூட விஜயை ஒரு நடிகராக பின்தொடர்வார்கள்.
எனவே விஜய்யின் இந்த எண்ணிக்கையை ஓட்டு எண்ணிக்கையாகக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு 'இன்ஸ்டாகிராமில்' 9 கோடியே 75 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆனால் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமாக 27 கோடியே 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். காரணம், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருப்பதே. அதேபோல், விஜய்க்கும் திரை உலக பிரபலம் என்பதால் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவலைதள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
- டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ-ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும்.
- நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.
'நவ' என்பது ஒரு சிறப்பு வாய்ந்த சொல்லாகும். இதற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று ஒன்பது மற்றொன்று புதியது. எனவே நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் சொல்லலாம். புதிய ராத்திரிகள் என்றும் சொல்லலாம்.
நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும். காரணம், இதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்று தான் வரும். ஆனால் நவராத்திரியின் போது இவை மாற்றம் அடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்றாகிறது.
சிறப்புக்குரிய நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.

அப்படியான நவராத்திரி விழா தொடங்கி மூன்று நாட்கள் முடிந்து உள்ளது. சதுர்த்தி திதியில் வியாழக்கிழமையான இன்று நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது.
பக்தர்கள் மஞ்சள் நிறத்தை அணிந்து, மனதை நேர்மறை மற்றும் நம்பிக்கையின் ஒளியால் நிரப்புங்கள். மஞ்சள் நிறம் கொண்ட சாமந்தி பூவைக் கொண்டு வழிபாடு செய்யலாம்.
- கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார்.
- கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும்.
நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம்.
கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார். வடமொழியில் "கூ" (சிறியது), "உஷ்மா" (வெப்பம்), "அண்டா" (உருண்டை) என்ற சொற்களின் சேர்க்கையே கூஷ்மாண்டா என்பதாகும், இது "சிறிய வெப்பமான உருண்டை வடிவத்தில் இருக்கும் பிரபஞ்சத்தை உருவாக்கியவள்" என்று பொருள்படும்.
கூஷ்மாண்டா தேவி
புராணங்களில் சொல்லப்பட்டபடி, காலத்தின் தொடக்கத்தில் எங்கும் இருள் மட்டுமே இருந்தது. சிருஷ்டி எதுவும் இல்லாமல், பிரபஞ்சம் வெறுமையாகக் காணப்பட்டது. அப்பொழுது, மகா சக்தியான ஆதி பராசக்தி தனது சிரிப்பின் ஒளியால் பிரபஞ்சத்தை உருவாக்கினாள்.
அவள் சிரித்தபோது வெளிப்பட்ட ஒளி, சூரிய மண்டலத்தின் ஒளியாக பரவியது. அந்த ஒளியிலிருந்தே உலகம் தோன்றியது.
கூஷ் என்றால் புன்சிரிப்பு என்றும், அண்டம் என்றால் உலகம் என்றும் பொருள். இவர், சூரியனின் மையப்பகுதியில் வசிப்பவர் என்றும், உலகத்திற்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்குபவர் என்றும் நம்பப்படுகிறது.
கூஷ்மாண்டா தேவி அஷ்டபுஜ (எட்டு கைகள்) உடையவள். கைகளில் கமண்டலம், தாமரை, அமிர்தக் கலசம், சங்கு, சக்கரம், அம்பு, வில் ஆகியவை உடையவள். இவரது வாகனம் சிங்கம். அவரது முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒளிர்கிறது. சூரிய மண்டலத்தின் நடுவில் திகழ்கிறாள்.
கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும். பக்தர்களுக்கு ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செழிப்பு, ஆனந்தம் வழங்குகிறாள். படைப்பின் தெய்வமாக கருதப்படுவதால், அவர் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரியவளாகக் கருதப்படுகிறார்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி கூஷ்மாண்டாயை நமஹ' என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-9 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 6.09 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : சுவாதி இரவு 7.03 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சதுர்த்தி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்
இன்று சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்கார காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர், தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-பயணம்
கடகம்-பரிசு
சிம்மம்-வரவு
கன்னி-களிப்பு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- அமைதி
மகரம்-கவனம்
கும்பம்-யோகம்
மீனம்-நிறைவு
- புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்.
- உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்.
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா ஒரு காகிதப் புலி என்றும் இழக்கப்பட்ட போரை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷியாவல் போரை விரைவாக வெல்ல முடியவில்லை என்றும் கேலி செய்த டிரம்ப், உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷிய படைகளிடம் இருந்து மீட்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும்,"புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்; உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்.பி.சி. வானொலியில் பேசுகையில், "ரஷ்யா ஒருபோதும் புலி அல்ல. அது பாரம்பரியமாகவே கரடியாக பார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷியா ஒரு உண்மையான கரடி... அதில் காகிதம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்
மேலும், 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சில பதட்டங்கள் இருந்தாலும், ரஷியா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிப்பதாகவும் பெஸ்கோவ் தெரிவித்தார்.






