என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை... ஆனால்... சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்
    X

    சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை... ஆனால்... சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்

    • நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்.
    • நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை.

    அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் நேற்று சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் இருந்து கோபிசெட்டிப்பாளையத்திற்கு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் எனது மனைவியை சந்திக்க சென்றிருந்தேன்.

    * சென்னை சென்றவுடன் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீட்டிற்கு திரும்பியிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    * நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை என்றார்.

    இதனிடையே, ஒருங்கிணைப்பு பணி எந்தளவு உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யார் என்னுடன் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள், ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது என கூறினார்.

    Next Story
    ×