என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது உத்தேச அட்டவணை என்றும், பள்ளிகள் மாணவர்களின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.

    இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

    • சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கட்டாயப்படுத்தினர்.
    • மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலம் அளித்தனர்.

    டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்துக்கு சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இயக்குநராக உள்ளார்.

    இந்த ஆசிரமத்தின் கீழ் ஸ்ரீ சாரதா இந்திய பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை (EWS) சேர்ந்த மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அவர்களில், முதுநிலை டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.

    அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புதல், மற்றும் தேவையற்ற உடல் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சாமியார் மீது மாணவிகள் சுமத்தியுள்ளனர்.

    சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை பதவிநீக்கம் செய்து ஆசிரம நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்கான விண்ணப்பம் சரிபார்த்ததில் 24 விண்ணப்பம்தான் உண்மையானது எனத் தெரியவந்தது.
    • சிஐடி-க்கு ஆதாரங்களை எப்போது வழங்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்?

    கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்த் தொகுதியில், 6018 வாக்காளர்கள் பெயரை போலியாக விண்ணப்பம் செய்து, நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ராகுல் காந்தி அதற்கான ஆதாரங்களுடன் வெளியிட்டார்.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த குற்றத்துக்கு உடந்தை எனவும் ராகுல் கூறினார். ஆனால், தேர்தல் ஆணையம் அவரது குற்றச்சாட்டை மறுத்து வந்தது.

    வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்கான விண்ணப்பம் சரிபார்த்ததில் 24 விண்ணப்பம்தான் உண்மையானது எனத் தெரியவந்தது.

    இந்நிலையில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வேண்டுமென்றால் ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் தேவை என்ற முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப் படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "ஞானேஷ் ஜி, திருட்டு பிடிபட்ட பிறகுதான் உங்களுக்குப் பூட்டுப் போட வேண்டும் என்று நினைவிருக்கிறதா? இப்போது திருடர்களையும் நாங்கள் பிடிப்போம்.

    அதனால், சிஐடி-க்கு ஆதாரங்களை எப்போது வழங்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

    வாக்கு திருட்டு தொடர்பாக கர்நாடக சிஐடி (CID) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்களைத் தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் சிஐடி விசாரணையைத் தொடர முடியும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

    எனினும், இ-சைன் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியது ஆலந்தத் தொகுதி சர்ச்சையால் அல்ல என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.  

    • பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

    இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 168 ரன்களை எடுத்தது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.

    முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்குகிறது.

    • போலி ஐ.டி. உருவாக்கி வாக்காளர் பெயர் நீக்க விண்ணப்பம் செய்யப்பட்டது.
    • தேர்தல் ஆணையம் முறையாக வாக்கு திருட்டில் ஈடுபட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில், 6018 வாக்காளர்கள் பெயரை போலியாக விண்ணப்பம் செய்து, நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ராகுல் காந்தி அதற்கான ஆதாரங்களுடன் வெளியிட்டார். ஆனால், தேர்தல் ஆணையம் அவரது குற்றச்சாட்டை மறுத்து வந்தது.

    வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்கான விண்ணப்பம் சரிபார்த்ததில் 24 விண்ணப்பம்தான் உண்மையானது எனத் தெரியவந்தது.

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி திட்டவட்டாக தெரிவித்து வருகிறார். அத்துடன் முறையாக இந்த திருட்டு நடந்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வேண்டுமென்றால் ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் தேவை என்ற முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப் படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் ஐ.டி. துறை இதற்கான பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, EVMs மெஷினில் வேட்பாளர் போட்டோ கலரில் பொறிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    • இட்லி கடை படம் அக்டோபர் 1அம் தேதி ரிலீஸ் ஆகிறது.
    • இப்படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் இட்லி கடை. இப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருண் விஜய், தனுஷ் குறித்து பேசியதாவது:-

    தனுஷ் ஒரு உண்மையான மனிதர் (True Person) என்று சொல்லனும்னா, அவருக்கு ஒருவரை பிடிச்சிருக்குனா எந்த அளவுக்கும் போய், உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறவர். எப்படி பட்டவர்னு அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

    என்னுடைய அடுத்த படமான "ரெட்ட தல"-யில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். கண்ணம்மா, கண்ணம்மா பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடிந்துவிட்டது, அந்த ஒரு பாடல் மட்டும் இருந்தது, எனது டீம் அனைவரும் தனுஷ் இந்த பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என்றார்கள்.

    அவரிடம் கேட்பதற்கு எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நான் பொதுவாக யாரிடமும் எதையும் கேட்கமாட்டேன். உங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் சென்று கெளுங்கள் சென்றார்கள். டியூன்-ஐ அவரிடம் போட்டு காண்பித்து நீங்கள் படினால் நன்றாக இருக்கும் பிரதர் என்றேன்.

    உடனே பண்றேன் என்றார். நான் எப்படி அவருக்கு உடனடியாக பண்றேன் என்று சொன்னனோ, அதேபோல் அவரும் சொன்னார். நீங்கள் எனக்கு பண்ணியிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு பண்ணமாட்டேனா என்றார். அது அருமையான சைகை.

    • தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக இருந்தவர் டாக்டர் பீலா வெங்கடேசன்
    • இவர் தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும் செயல்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.

    இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வடசென்னை படம் 2018ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
    • வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்ற படமாக அமைந்தது.

    தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ ரலீஸ் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் கோவையில் வெளியிடப்பட்டது.

    ரிலீஸ்க்கு முந்தைய புரமோசனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மதுரையில் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தனுஷிடம் வடசென்னை 2 குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ் "வடசென்னை 2 படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும். அதற்கு அடுத்த வருடம் (2027) ரிலீஸ் ஆகும்" என்றார்.

    வடசென்னை படம் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. லோக்கல் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது.

    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
    • இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, வங்கதேசம் அணி பந்து வீச, இந்திய அணி பேட் செய்ய களமிறங்குகிறது.

    • திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
    • கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.

    அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.

    40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?

    திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.

    விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.

    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.
    • போராட்டத்தைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இந்நிலையில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×