என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual harassment case"

    • சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கட்டாயப்படுத்தினர்.
    • மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலம் அளித்தனர்.

    டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்துக்கு சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இயக்குநராக உள்ளார்.

    இந்த ஆசிரமத்தின் கீழ் ஸ்ரீ சாரதா இந்திய பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை (EWS) சேர்ந்த மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அவர்களில், முதுநிலை டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.

    அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புதல், மற்றும் தேவையற்ற உடல் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சாமியார் மீது மாணவிகள் சுமத்தியுள்ளனர்.

    சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை பதவிநீக்கம் செய்து ஆசிரம நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

    • தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.
    • இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

    லக்னோ:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். ஆஸ்திரேலியா சென்ற இந்திய 'ஏ' அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.

    இதற்கிடையே யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்து இருந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த அந்தப் பெண் முதல்-மந்திரியின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார்.

    அந்தப் பெண் தனது புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தேன். திருமணம் செய்வதாக கூறி பலமுறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். உடல் ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் யாஷ் தயாள் அவரது குடும்பத்தினருக்கு தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், இது அவரை முழுமையாக நம்ப வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 24-ந்தேதி இந்த புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பெண் புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு இந்திய தண்டனை சட்டம் 69-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது. ஏமாற்றுதல் அல்லது தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.

    இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

    யாஷ் தயாள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    • பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆஜர் ஆனார்கள்.
    • இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாது காப்பி ற்காக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு டிஜிபி இதில் ஆஜராகவில்லை. 

    ×