search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Customs officials"

    • பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆஜர் ஆனார்கள்.
    • இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாது காப்பி ற்காக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு டிஜிபி இதில் ஆஜராகவில்லை. 

    • பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
    • பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான கிஷோருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சில நாட்களாக கிஷோருடன் பேஸ்புக்கில் எஸ்எம்எஸ் மூலம் பேச்சு கொடுத்து வந்தார். இதன்மூலம் கிஷோரும், அந்த லண்டனை சேர்ந்த நபரும் நல்ல நண்பர்களாகியுள்ளனர்.

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக அளிக்கிறேன் என்றும், அதனை பார்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கிஷோர், லண்டனில் இருந்து பரிசு வரும் என நம்பி காத்திருந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர், கிஷோரிடம் தங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்ட விரோதமானது எனவும், இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை பாதுகாப்பாக பெற பல லட்சம் பணத்தை செலவழிக்க வேண்டும் என கூறிகிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. இதனால் ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து கிஷோர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    திருச்சி விமான நிலையத்தில் சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பாக சுங்க அதிகாரிகள் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனையிடுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை சுங்க இலாகா அதிகாரிகள் 20 பேர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களை உள்ளே விட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.

    திருச்சி விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை ஊழியர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே வருவதற்கு நுழைவு பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த நுழைவு பாஸை மாதந்தோறும் அவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் நுழைவு பாஸ் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்ட நிலையில் அவர்கள் அதனை புதுப்பிக்காமல் திருச்சி விமான நிலையத்திற்கு பணிக்கு வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் புதிய அடையாள அட்டை கொண்டு வந்தால்தான் அனுமதி அளிக்கப்படும் என்று தொழிற்பாதுகாப்பு படையினர் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

    இதற்கிடையே ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு செல்ல 160 பயணிகள் தயாராக இருந்தனர். நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தும் சுங்க அதிகாரிகள் இல்லாததால் சோதனை நடத்த முடியவில்லை.

    இதையடுத்து ஏர் ஏசியா மேலாளரின் அனுமதியுடன் சுங்கத்துறை சோதனையின்றி 160 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலேசியா விமானம் சென்றது. இதையடுத்து சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகள் பரிசோதனைக்காக காத்திருந்தனர். ஆனால் சோதனை செய்ய யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர்.

    இதுகுறித்து மத்திய பாதுகாப்பு படையினர் விமான நிலைய இயக்குனர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சுங்கத்துறை ஊழியர்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து பணிக்கு சென்றனர். பின்னர் விமான பயணிகள் சோதனை செய்யப்பட்டு வெளியே வந்தனர். இதனால் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport
    ×