என் மலர்
இந்தியா

சத்தீஸ்கரில் ஒரே நாளில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்த 71 மாவோயிஸ்டுகள்!
- சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
- சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.
சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.






