என் மலர்
இந்தியா

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவிக்காலம் நீட்டிப்பு
- கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
- ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டிசம்பர் 2021 இல் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்திய இராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனில் சவுகான் பல உயரிய பதக்கங்களை பெற்றுள்ளார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக அனில் சௌஹானின் பதவிக்காலம் 2026 மே 30-ஆம் தேதி வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






