என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
- மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று கூறினார்.
பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
ரிஷபம்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
மிதுனம்
புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை செய்ய தாமதம் ஏற்படும். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உடல்நலக் கோளாறுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.
சிம்மம்
யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
கன்னி
நினைத்தது நிறைவேறும் நாள். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும்.
துலாம்
பிரபலமானவர்களால் பிரச்சனை தீரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வந்து சேரும்.
விருச்சிகம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிப்பதே நல்லது.
மகரம்
தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகள் வந்து சேரலாம். உறவினர் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.
மீனம்
பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
- ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.
- இதையடுத்து, தந்தை - மகள் இருவரும் நேரில் சந்தித்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர்.
எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன.
இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார். அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.
இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.
50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
- அப்போது மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
டப்ளின்:
அயர்லாந்தில் உருவான ஆமி புயலால் கடந்த சில நாளாக பெய்த கனமழையால் டோனகல், லீட்ரிம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.
இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
ஆமி புயல் காரணமாக டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 115 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல், ரெயில் சேவையும் கடுமையாக பாதிப்பு அடைந்தது.
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தில் நடந்தது.
- இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், உங்களது பார்ட்னர் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜடேஜா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் என உருக்கமாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார்.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.
அகமதாபாத்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், ஜடேஜா ஆகியோர் சதமடித்து அசத்த 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை டிராவிட் (163 போட்டிகளில் 11 முறை) உடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா (86 போட்டிகளில் 11 முறை).
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் (200 போட்டிகளில் 14 தடவை) உள்ளார்.
சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார் ஜடேஜா இவர் 50 போட்டிகளில் 10 தடவை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
- டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
- பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.
வாஷிங்டன்:
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.
நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.
- 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்.
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி::
மாயேம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது.
கடந்த சில ஆண்டாக எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விநியோகித்து வருகிறது.
எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.வுக்கு மாற மாட்டார்கள் என கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?
2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். 2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களை வழங்குவதற்கு சமமாகி விடும்.
கோவாவில் பா.ஜ.க. அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
- வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.
- பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.
புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.
வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கெய்ர் ஸ்டார்மரும், மோடியும் 9-ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள் நிதி, வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்து சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக ராம்போ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.
அருள்நிதிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் 10ம் தேதி சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், ராம்போ படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது.
- ரோகித் ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
- சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு இது ஒரு புதிய சவால் என்றாலும், ரோகித் வெறும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒருநாள் அணியையும் வழிநடத்தும் கூடுதல் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், ரோகித் கேப்டனாக இல்லாமல், ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
ஒருவேளை அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால், மீண்டும் கேப்டனாகத்தான் செல்வார் என்று நான் நினைத்தேன். அவர் சமீபத்தில்தான் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பிற தொடர்களையும் வென்று கொடுத்துள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவர். எனவே, குறைந்தபட்சம் இந்த ஒரு தொடருக்காவது அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் 2027 உலகக்கோப்பையைப் பற்றி யோசிப்பதாக இருந்தால், அது இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். ஒருவேளை இன்னும் 6 அல்லது 8 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து கூட அவர் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சுப்மன் கில்லுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே நேரத்தில், ரோகித் சர்மா கேப்டனாக இல்லாதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
- 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்.
- சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரைக்கு பொழுது போக்க வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடற்கரை சீரமைக்கப்பட்டு அண்ணா சதுக்கம் அருகே 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரூ.64 லட்சம் செலவில் அமையும் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் தளம், ஊஞ்சல், சறுக்கு மேடை, மரம் சுற்றும் விளையாட்டு உள்ளிட்ட வசதிகள் அமைகிறது.
இதேபோல் சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது. இந்த கடற்கரை சீரமைப்பால் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு பகுதியை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளுக்கு திருப்ப முடியும். இதன் மூலம் சட்டவிரோத கடைகள் குறையும் என்றார் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்.
கடற்கரை சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட அனுமதியில்லாத கடைகள் அகற்றப்பட இருப்பதாகவும் மாநகராட்சி சார்பில் பேட்மின்டன் கோர்ட்டு, உடற்பயிற்சிக்கான விளை யாட்டுகள் அமைக்க இருப்ப தாகவும் அவர் கூறினார்.






