என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அருள்நிதி நடித்துள்ள ராம்போ படத்தின் டிரெயிலர் ரிலீஸ்
    X

    அருள்நிதி நடித்துள்ள "ராம்போ" படத்தின் டிரெயிலர் ரிலீஸ்

    அருள்நிதி நடித்துள்ள ராம்போ திரைப்படம் வரும் 10ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள் நிதி, வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் நடித்து சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக ராம்போ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

    அருள்நிதிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் 10ம் தேதி சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

    இந்நிலையில், ராம்போ படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×