என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
- உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது.
சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரெயில்வே துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அமைச்சர் தீர்த்து, நாடு முழுவதும் ரெயில் விபத்துகள் ஏற்படாமல் கவனித்தால் நாட்டிற்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும்.
மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லக்கூடியவர்கள் தான் இங்கே பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்றாலே ஒரு இளக்காரம், தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அதனால் அந்த மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுவதுதான் பிளவை ஏற்படுத்துமே தவிர உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது. சமூகத்தை ஒருங்கிணைக்கும்.
சீமானின் வீட்டில் இருக்கும் பெண்கள், கட்சியில் இருக்கும் பெண்கள் கேட்க வேண்டும். இதைவிட கேவலமாக பேசுவதை பெண்களை எப்படி சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறார்கள், கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
- நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'.
- சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அண்மையில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இதனைக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- வருகிற 8-ந்தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த இனக்கலவரத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறபோதும் அங்கு இன்னும் வன்முறை முழுமையாக ஓய்ந்தபாடில்லை.
இதற்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததால் மணிப்பூரில் கடந்த மாதம் 13-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் இன்று மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மார்ச் 8-ந்தேதியில் இருந்து மணிப்பூர் மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகளில் தடங்கள் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.
- தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பங்கேற்காது என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்துள்ளார்.
இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம். தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அமித்ஷா தெளிவுப்படுத்தி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான். அப்பிரச்சனைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் தொகுதி மறுவரையறை குறித்து பேசி திசை திருப்ப முயற்சி. மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் கூறினார்.
- குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை.
- குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
அந்த பிரிவிலிருந்து ஆஸ்திரலியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
- சடலத்தின் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
கேரளாவை சேர்ந்த சிபு என்ற இளைஞரின் உடல் தனியார் எஸ்டேட்டில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குட் பேட் அக்லி பட டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது.
- இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் அஜித் நடித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.
டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர் 5 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து நாளை மோதுகிறது.
- இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் நாளை விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் முகமது ஷமியும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் சுப்மன் கில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் முகமது சமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார்.
- இந்த பதிவுக்கு எலான் மஸ்க் இதய வடிவ சின்னத்தை பதிவிட்டுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார். எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது.
அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் தனக்கு பிறந்த குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று தெரிவித்தார். இந்த நிலையில் 14-வது குழந்தைக்கு எலான் மஸ்க் தந்தையாகி உள்ளார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷிவோன் ஷில்லீஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் அற்புதமான மற்றும் நம்பமுடியாத மகன் செல்டன் லைகர்கஸைப் பற்றி நேரடியாகப் பகிர்ந்து கொள்வது நல்லது என்று நாங்கள் உணர்ந்தோம். அவரை மிகவும் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு எலான் மஸ்க் இதய வடிவ சின்னத்தை பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 4-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
- ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
- ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ந்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை:
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடைபிடிப்பார்கள்.
இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28.2.2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ந்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.
புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
- நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிலுக்கு பதில் பேசி கொண்டே இருந்தனர். இதில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
டிரம்ப் கூறும்போது, "நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற போவதில்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.
உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். இல்லையென்றால் போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள். உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று எனக்கு தெரியும்.
நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் தனியாக செல்ல எந்த வாய்ப்பும் உங்களிடம் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் குறைவாக உள்ளனர். ஆனால் நீங்கள் எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.
உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. நான் புதினுடன் இணையவில்லை., நான் யாருடனும் இணைய வில்லை. நான் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது நாங்கள் வெளியேறி விடுவோம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி - டிரம்ப் சந்திப்பு குறித்து பேசிய ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், "நடந்தது மிக நல்ல விஷயம், முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார். நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது, ஆனால் இது போதாது. உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கட்சியை பலப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- 2026-ல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே திட்டமிட்டுள்ளதாக த.வெ.க.வினர் கூறினர்.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.
அதன்பிறகு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக, அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளிடையே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் கடந்த 26-ந்தேதி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்று பேசிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்து 1967-ம் ஆண்டு முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர். கட்சி ஆரம்பித்து 1977-ம் ஆண்டு தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்தார். அவர்கள் இருவருமே மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். அதுதான் வரலாறு, அதேபோல் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும் என்றார்.
இந்த விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று பேசினார். '35ஆண்டு கால அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்' என்று அவர் பேசினார்.
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரமாட்டார். விஜய் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை.
தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட உள்ளது. தனித்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
விஜய் தனித்து போட்டியிடப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருப்பது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாந்த் கிஷோரின் இந்த பிரத்யேக பேட்டி இன்று இரவு 9 மணிக்கு தந்தி டி.வி.யில் முழுமையாக ஒளிபரப்பாக உள்ளது.






