என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
- உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதக்கக்கோரி முறையீடு செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார்.
சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார்.
இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது.
விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் உள்ளன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதக்கக்கோரி முறையீடு செய்தார்.
இந்நிலையில், சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் 62வது வழக்காக விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது.
- எமகாதகி படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார்.
- படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல அமானுஷ்ய காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. கதாநாயகியான ரூபா மர்மமான முறையில் இறக்கிறார். இறந்த உடலில் உயிர் இருக்கும் மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான சிலு சிலு சிரிப்பாய் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை எஸ்.ராஜேந்திரன் வரிகளில் தஞ்சை செல்வி பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
- இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அனி திணறியது. இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் 2-வது அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.
- டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
- சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும்.
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு, ஏப்ரல் 1ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
காற்று மாசை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் வெளியிட்டார்.
டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, தனது வாக்குறுதிகளில் மாசற்ற டெல்லியை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, இனி டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் டிசம்பர் 2025-க்குள் டெல்லியில் உள்ள 90 சதவீத பொது சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும் என்றும் கூறினார்.
- பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல்.
- விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டாஅர் வெளியிட்டுள்ளது. இத்தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டீசரில் விமல் கடவுள் வேஷம் கட்டி ஆடுவது போன்ற காட்சிகளில் மிரட்டியுள்ளார். இத்தொடரின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் (பிப்ரவரி) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாய்.
- இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 9.1 சதவீதம் அதிகம்.
கடந்த மாதம் (பிப்ரவரி) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 9.1 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டின் வசூல் 1.42 லட்சம் கோடி ரூபாய். இறக்குமதி மூலம் 41.072 கோடி ரூபாய் வரி வசூல் கிடைத்துள்ளது. இது 5.4 சதவீதம் அதிகமாகும்.
மத்திய ஜி.எஸ்.டி. மூலம் 35,204 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் 43,704 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 90,870 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.
20,889 கோடி ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 17.3 சதவீதம் அதிகமாகும். 2025 பிப்ரவரியில் நிகர ஜி.எஸ்.டி. வசூல் 8.1 சதவீதம் உயர்ந்து 1.63 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.68 லட்சம் கோடி ரூபாய் ஆகும். நிகர ஜி.எஸ்.டி. வசூல் 1.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
- இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்லிவிட்டு சென்றார்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், இந்தி திணிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்லிவிட்டு சென்றார்.
மும்மொழி கொள்கை தேவையற்றது. அவரவருக்கு பிடித்த மொழியை அவரவர் படிக்கலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது.
- திரைப்படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இரண்டாம் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தோ-திபெத் எல்லையில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
- தற்போது வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரகாண்டில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 49 பேர் உயிருடன் மீட்கப்பட் நிலையில் 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமம் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய-திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த மலை கிராமத்தில் எப்போதும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் அங்குள்ள சாலைகளில் பனித்துனிகள் குவிவது வழக்கம்.
திபெத் எல்லையை நோக்கி ராணுவம் நகர்வதற்கான முக்கிய பாதை என்பதால் சாலைகளில் குவியும் பனியை அகற்றுவதற்காக எல்லை சாலைகள் அமைப்பை (பிஆர்ஓ) சேர்ந்த தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே முகாம்களை அமைத்து தங்கி, பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. இதில் முகாமில் இருந்த 57 தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.
இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் முதலில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவை தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறையில் சிறிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது.
இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களும், ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக பனிச்சரிவில் சிக்கிய 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மனா கிராமத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஏற்கனவே கடுமையான பனிப்பொழிவு நிலவிய நிலையில் மழையும் பெய்ய தொடங்கியது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் மீட்பு குழுக்கள் மெதுவாக அதேவேளையில் பாதுகாப்பாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கடும் சவால்களுக்கு மத்தியில் மாலை நேரத்தில் மேலும் 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களும் உடனடியாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிய நிலையில் நேற்று இரவு வரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று 17 பேர் மீட்க்கப்பட்டனர். மதியம் வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று மீட்கப்பட்டவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5 பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநில முதல்வர் பூஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு சென்று பனிச்சரிவு நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் மீட்புப்பணி குறித்து கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி, தாமியை டெலிபோனில் தொடர்பு கொண்டு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தார்.
- விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.
- சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் நேற்று இரவு 1¼ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் பேரில் 63 கேள்விகள் சீமானிடம் கேட்கப்பட்டன. விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கம், இருவரும் ஒன்றாக இருந்தது, பணம் கொடுத்ததாக கூறப்படுவது போன்ற விசயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்துள்ளார்.
இதனை வளசரவாக்கம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். இருவரும் சம்மதத்தின் பேரிலேயே ஒன்றாக இருந்தோம் என்று சீமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகார்்ட்டு உத்தரவிட்டதையடுத்து, வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே பெங்களூருக்கு நேரில் சென்று விஜயலட்சுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த வாரத்தில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, "இந்த வழக்கு விசாரணை, கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே விரைவுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
- உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது.
சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரெயில்வே துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அமைச்சர் தீர்த்து, நாடு முழுவதும் ரெயில் விபத்துகள் ஏற்படாமல் கவனித்தால் நாட்டிற்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும்.
மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லக்கூடியவர்கள் தான் இங்கே பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்றாலே ஒரு இளக்காரம், தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அதனால் அந்த மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுவதுதான் பிளவை ஏற்படுத்துமே தவிர உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது. சமூகத்தை ஒருங்கிணைக்கும்.
சீமானின் வீட்டில் இருக்கும் பெண்கள், கட்சியில் இருக்கும் பெண்கள் கேட்க வேண்டும். இதைவிட கேவலமாக பேசுவதை பெண்களை எப்படி சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறார்கள், கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
- நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'.
- சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அண்மையில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இதனைக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






