என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ்
    • தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.

    பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ் (வயது 34). இவர் சினிமா நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் சீனிவாச ராவ் ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அதில் இயக்குனர் ராஜமவுலி தன்னை மிகப்பெரிய சித்ரவதைக்கு உட்படுத்தினார். அவருடைய நடவடிக்கை என்னை தற்கொலைக்கு தூண்டியது என தெரிந்திருந்தார்.

    இந்த வீடியோவை அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பாகுபலி இயக்குனர் மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். எஸ். எஸ். ராஜமவுலியை பொய் கண்டுபிடிப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிட வில்லை.

    இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு.
    • தனியார் தங்கும் விடுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர் வெடித்ததில் கேரளாவைச் சே்ந்த சிபு என்பவர் உயிரிழந்துள்ளார்.

    சிறுமலை பழையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

    ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர்

    மு.க.ஸ்டாலின்-ஓ , தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

    நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் .

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து இங்கிலாந்து 179 ரன்னில் சுருண்டது.
    • தென்ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் "பி" பிரிவு கடைசி லீக் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பில் சால்ட், டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் டக்-அவுடடில் வெளியேறினார்.

    அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. டக்கெட் 24 ரன்னிலும், ஜோ ரூட் 37 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 19 ரன்னிலும், பட்லர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 38.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மகாராஜ் 2 விக்கெட்டும் லுங்கி நிகிடி, ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டப்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிக்கெல்டன் 27 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டுஸ்சன் உடன் ஹென்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரும் அரைசதம் விளாசினர்.

    வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளாசன் 56 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுஸ்சன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.

    29.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுஸ்சன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா "பி" பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடம் பிடித்துள்ளது.

    ஏ பிரிவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் தோல்வியடையும் அணியடன் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் மோதும்.

    • உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
    • புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம்.

    தமிழகத்தில் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கும், மார்ச் 5ம் தேதி முதல் 11ம் தேதிக்கும், மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இதையொட்டி, 10ம், 11ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

    • ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

    இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில்  வெளியிட்டது. இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    டிரெயலர் காட்சி மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் உயர் தரத்துடன் செய்துள்ளனர்.இந்தியன் சினிமாவிலேயே முதல் முறையாக கடல் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகியுள்ளது.

    கிங்ஸ்டன் படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி, அருண்ராஜா காமராஜ் வரிகளில் கேபர் வாசுகி, அருண்ராஜா காமராஜ் மற்றும் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இரண்டு போட்டிகள் டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.
    • பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட்டின் முழுத் தொகையும் ரசிகர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி ஆகியவற்றிற்கான டிக்கெட் பணம் திருமப் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

    மார்ச் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துளளது.

    மார்ச் 25-ந்தேதி ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மழைக் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    27-ந்தேதி பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டியும் மழைக்காரணமாக டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.

    நேற்று (பிப்ரவரி 28-ந்தேதி) ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கீட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டது.

    • துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
    • நஹஸ் இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான RDX திரைப்படத்தை இயக்கினார்

    துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான தற்பொழுது I'm Game என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நஹஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.

    கிங் ஆஃப் கொதா திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் மலையாள திரைப்படமாகும். நஹஸ் இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான RDX திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித், இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொள்கின்றனர்.

    இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. திரைப்படம் மலையாள மொழி தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்ண்டம் ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு கைகள் இடம் பெற்றுள்ளது. ஒருக்கையில் காயங்களுடன் கிரிக்கெட் பந்தை பிடித்துள்ளது. மற்றொரு கை எரியும் சீட்டை பிடித்துள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
    • காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.

    இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.

    அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.

    அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவருக்கும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், இந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது.
    • 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?.

    15 வருட பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 வருடத்திற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது. பீகாரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் அதிக அளவில் மாசுவை வெளியிடும் 15 வருடத்திற்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆகையால், 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?. இந்த அரசு பீகார் மக்களுக்கு சுமையாகிவிட்டது. இது கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

    20 வருடத்திற்கு மேலாக நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மோசமான மாசு என்ற வறுமை, வேலைவாய்ப்புயின்மை, ஊழல், குற்றம், ஊடுருவல் ஆகியவற்றை பரப்பிவிட்டுள்ளது.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
    • உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதக்கக்கோரி முறையீடு செய்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார்.

    சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார்.

    இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

    தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது.

    விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் உள்ளன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

    இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதக்கக்கோரி முறையீடு செய்தார்.

    இந்நிலையில், சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் 62வது வழக்காக விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது.

    • எமகாதகி படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார்.
    • படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல அமானுஷ்ய காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. கதாநாயகியான ரூபா மர்மமான முறையில் இறக்கிறார். இறந்த உடலில் உயிர் இருக்கும் மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான சிலு சிலு சிரிப்பாய் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை எஸ்.ராஜேந்திரன் வரிகளில் தஞ்சை செல்வி பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
    • இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அனி திணறியது. இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் 2-வது அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது. 

    ×