என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • செமி கண்டக்டர்கள் முதல் விமானம்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது.
    • பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியா வர விரும்புகிறார்கள். உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா வழங்கி உள்ளது.

    செமி கண்டக்டர்கள் முதல் விமானம்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது. பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.

    உலகை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் இந்தியா இணை தலைமையாளராக இருந்தது. தற்போது உலக நாடுகளின் தொழிற்சாலையாக உள்ளது.

    இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புகிறது. உலக அளவில் நம் நாட்டின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

    பல காலாவதியான சட்டங்களை பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 3-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

    இந்தியாவின் புதிய சாதனைகளை உலகளாவிய செய்தி சேனல்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து பேட் செய்த டெல்லி அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய எல்லீஸ் பெர்ரி அரை சதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராக்வி பிஸ்ட் 33 ரன் எடுத்தார்.

    டெல்லி சார்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ஜெஸ் ஜான்சேன், ஷபாலி வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அரை சதம் அடித்தனர்.

    இறுதியில், டெல்லி அணி 15.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அங்கு தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    • ப்ளூ ஸ்டார் மற்றும் எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
    • பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் இந்தி துறையில் அறிமுகமானார்.

    தெகிடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். இதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். போர் தொழில் திரைப்படம் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு வெளியான ப்ளூ ஸ்டார் மற்றும் எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படங்களை மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் இவர் தமிழில் ரஜினி முருகன், பைரவா, சண்டக்கோழி 2, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தி துறையில் அறிமுகமானார். தமிழில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் திரையரங்கிள் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓடிடியில் திரைப்படத்தை கொண்டாடினர்.

    அடுத்தது கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது அடுத்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் எனவும் கூறப்படுகிறது. இதுக்குறித்த மற்ற விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்பொட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்றது.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பின்லாந்தின்ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 3-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 7-6 (14-12), 10-8 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு.
    • 15 மண்டலங்களில் மணலி மண்டலம், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.

    தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கெனவே இருந்த 15 மண்டலங்களில் மணலி மண்டலம், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டது. அதன்படி, 14 மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி -சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால், தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக வசதி போன்ற காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்கள் விளாசினார்.
    • ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.

    இந்திய அணிக்காக விளையாடியவர் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியுள்ளார். இவர் தற்போது உள்நாட்டு போட்டிகளில் விதர்பா அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    விஜய் ஹசாரே (50 ஓவர் போட்டி) தொடரில் 9 போட்டிகளில் ஐந்து சதம், ஒரு அரைசதத்துடன் 779 ரன்கள் விளாசினர். இதனால் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேரளாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார். இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மொத்தம் 860 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 சதம் அடங்கும். மொத்தம் இந்த சீசனில் 9 சதங்கள் அடித்துள்ளார்.

    இன்றைய ஆட்டத்திற்குப் பிறகு சிறப்பாக விளையாடும் உங்களுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு கருண் நாயர் பதல் அளித்து கூறியதாவது:-

    இந்த கேள்வியை கேட்பதற்கு நான் சரியான நபர் கிடையாது. இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது. நான் சொல்வது எல்லாம், ஒவ்வொரு போட்டியிலும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என பார்க்கிறேன். அது நடைபெற்றால் (இந்திய அணியில் தேர்வு செய்தால்) அது நடக்கும். என்னுடைய வேலையை நான் சிறப்பாக செய்ய வேண்டும். அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

    இவ்வாறு கருண் நாயர் தெரிவித்தார்.

    • தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால் உடனடியாக அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

    பாலியல் குற்றவாளி சீமான் பெண்களை அநாகரீகமாக தரக்குறைவாக பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்வதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாலியல் குற்றவாளி சீமான் தொடர்ந்து ஊடகத்தில் பெண்களை வாயில் சொல்ல முடியாத சொற்களால் அநாகரீகமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னை என்ன செய்ய முடியும் என்று ஆணவத்துடன் சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டுள்ள அவர் மீது தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால் உடனடியாக அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.

    டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ்
    • தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.

    பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ் (வயது 34). இவர் சினிமா நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் சீனிவாச ராவ் ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அதில் இயக்குனர் ராஜமவுலி தன்னை மிகப்பெரிய சித்ரவதைக்கு உட்படுத்தினார். அவருடைய நடவடிக்கை என்னை தற்கொலைக்கு தூண்டியது என தெரிந்திருந்தார்.

    இந்த வீடியோவை அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பாகுபலி இயக்குனர் மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். எஸ். எஸ். ராஜமவுலியை பொய் கண்டுபிடிப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிட வில்லை.

    இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு.
    • தனியார் தங்கும் விடுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர் வெடித்ததில் கேரளாவைச் சே்ந்த சிபு என்பவர் உயிரிழந்துள்ளார்.

    சிறுமலை பழையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

    ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர்

    மு.க.ஸ்டாலின்-ஓ , தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

    நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் .

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×