என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரும்புக்கரம்"
- உளவுத்துறை கண்காணிப்பு குறைவால் இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது.
- வருங்காலத்தில் பல இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும், ஆயுத கலாசாரம் பெருகவும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாடு ஆயுதகாடாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.
திருப்பூர்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கம்பம் மலை தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகம் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதலை நடத்திவிட்டு எச்சரிக்கை செய்வது போல் கருத்தை பதிவிட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் நக்சல் தீவிரவாதிகள் தலை தூக்குகின்றனர் என்றும், எல்லையில் உள்ள காடுகளில் பதுங்கி பயிற்சி எடுத்து வருகிறார்கள் என்றும், காவல்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து நக்சலைட்டுகளை ஒடுக்க வேண்டும் என்றும் பலமுறை தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தற்போது தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் இந்த தாக்குதல் நீலகிரியில் நடந்துள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு குறைவால் இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவு செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வருங்காலத்தில் பல இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும், ஆயுத கலாசாரம் பெருகவும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாடு ஆயுதகாடாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழக அரசு நக்சலைட்டுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.