என் மலர்
நீங்கள் தேடியது "Actress vijayalakshmi"
- நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
- வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்தார்.
சீமானை கைது செய்ய வைக்காமல் இங்கிருந்து செல்ல மாட்மேன் என்று சவால்கள் விட்டெறிந்தார்.
சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, செய்தியளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்தார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.
இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இருந்தாலும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து இன்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.
இதுதொடர்பாக பேசிய விஜயலட்சுமி, "தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்" எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பெங்களூருக்கு சென்ற நடிகை விஜயலட்சுமி, " சாட்டை முருகன் தான் ரூ.50 ஆயிரம் வழங்கி தன்னை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார் என்று பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர், " சாட்டை துரைமுருகன் ஏற்பாடு செய்த வழக்கறிஞரை கொண்டுதான் புகாரை வாபஸ் பெற்றேன். சீமான் நீங்கள் மான நஷ்ட ஈடு வழக்கு போடுங்கள். நான் அனைத்து ஆதாரங்களையும் கொண்டு வந்து நிரூபிக்கிறேன்" என்றார்.
- நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.
- நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.
அப்போது, விஜய் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதைதொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, "விஜய் சொல்வது கொள்ளை அல்ல கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை" என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில், சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறி வரும் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சீமானை கடுமையாக விமர்சித்து கூறியுள்ளார்.
வீடியோவில் கூறப்பட்டுள்ளாதவது:-
என்ன மிஸ்டர் சீமான். சாபம் கொடுக்குறீங்க விஜய் அண்ணாவை லாரி மோதி செத்துற போறனு சொல்றீங்க சாபம் விடுறதுக்கு தீங்க உத்தமரா? பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை.
முதல்ல உங்க கட்சியில இருக்குற ஓட்டையை அடையுங்க.. நிறைய ஓட்டை இருக்கு. உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க. திருச்சி சூர்யா உங்ளோட நிர்வாண வீடியோவ வெளியிட்டு மானத்தை வாங்கப்போகிறாராம். அதைப்போய் பாருங்க..
அண்ணன் விஜய் ஆகட்டும்; அல்லது திமுக ஆகட்டும்; கொள்கை ரீதியாக தானே தவறு பண்ணி இருக்காங்க அப்படின்னு நீங்க தான் சொல்லிட்டு இருக்கீங்க. கொள்கை ரீதியா தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா, எங்கள மாதிரி பெண்களோட வாழ்க்கைய சீரழிச்சு எங்கள நடுரோட்டில் விட்ட நீங்க எது அடிச்சு சாவமாட்டீங்க?
தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.
- சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் நேற்று இரவு 1¼ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் பேரில் 63 கேள்விகள் சீமானிடம் கேட்கப்பட்டன. விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கம், இருவரும் ஒன்றாக இருந்தது, பணம் கொடுத்ததாக கூறப்படுவது போன்ற விசயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்துள்ளார்.
இதனை வளசரவாக்கம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். இருவரும் சம்மதத்தின் பேரிலேயே ஒன்றாக இருந்தோம் என்று சீமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகார்்ட்டு உத்தரவிட்டதையடுத்து, வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே பெங்களூருக்கு நேரில் சென்று விஜயலட்சுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த வாரத்தில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, "இந்த வழக்கு விசாரணை, கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே விரைவுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான்.
- விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. ஆதாரம் என்னிடம் உள்ளது.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் சீமான் பேசுவதை யெல்லாம் கேட்டுக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என்று தி.மு.க. எம்பி கனிமொழி கூறி இருப்பது தொடர்பாகவும், பாலியல் வழக்கு குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கனிமொழி கூறியுள்ள கருத்துக்கள் என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் தொடங்கி பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வரை கனிமொழி இதுவரை கருத்துக்களை தெரிவிக்காதது ஏன்?
இதுபோன்ற சூழலில் என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள்.
வழக்கு விசாரணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.
என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 'என்ஜாய் மென்ட் 'வித் அவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி' என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.
அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்? இதற்கு கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு இரண்டு மூன்று சீட்டுகளுக்காக எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் எந்த மக்கள் பிரச்சனைக்கும் அவர்கள் குரல் கொடுக்கா மல் மவுனம் சாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறது. இந்த நாட்டுக்கு அது தேவையான கட்சி தானா? திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான். தமிழகத்தில் திராவிட கூட்டத்தை தவிர வேறு யாரும் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே என்னை குறி வைத்துள்ளனர்.
கூட்டணியில் இருப்பதால் மயிலிறகையும் மல்லிகை பூவையும் வைத்துக் கொண்டு வருடி விடும் வேலையைத்தான் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. கூட்டணியில் இருப்பதால் மீனவர் பிரச்சனைக்கும் ஆசிரியர்கள் பிரச்சனை என எந்த பிரச்சினையும் அவர்கள் குரல் கொடுப்பதே இல்லை.
மும்மொழி கொள்கையில் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாயில் புண் இருக்கிறதா? இல்லை புற்று பாதித்துள்ளதா? இப்படி இருந்து கொண்டு என்னை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டார்கள் என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற என்னையும் சவுமியா அன்புமணியையும் குஷ்புவையும் முன்கூட்டியே கைது செய்தனர்.
அரசின் தவறை தட்டி கேட்கும் போராட்டம் அது என்பதாலேயே அதற்கு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கனிம வளங்கள் உள்ளே போவதை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படி இயற்கை வளங்களை காக்க முடியாத அரசாகவே இந்த அரசாங்கம் இருந்து வருகிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.






