search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Zelenskyy"

    • இத்தாலியில் உள்ள அபுலியாவில் ஜி7 மாநாடு நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.

    ரோம்:

    ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதி திரும்புவதற்கான வழி என இந்தியா நம்புகிறது என பதிவிட்டுள்ளார்.

    • ரஷியாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.
    • அங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

    ரஷியா கைப்பற்றிய பல இடங்களை உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார்.

    அப்போது உக்ரைனின் இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

    இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:

    ரஷியா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.

    மீட்கப்பட்ட நகரங்களை ஆய்வு செய்தேன். ரஷியப் படையினர் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

    இசியம் நகரில் மிகப்பெரிய குழியில், 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. போர் விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினர் கொன்று குவித்துள்ளனர்.

    ரஷியாவின் போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம். கொலை செய்யப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • உக்ரைன் பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தலைவரை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இதேபோல் அந்நாட்டு அரசு வழக்கறிஞரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 5 மாதத்தை நெருங்கியுள்ளது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

    இதனிடையே, உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞர் ஆகியோரை பணிநீக்கம் செய்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அரசு பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.

    இந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்தப் பிரிவுகளின் தலைவர்களை நீக்கியுள்ளார்.

    ×