என் மலர்

  நீங்கள் தேடியது "oil price"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த எண்ணெய் விலை வரம்பை ஏற்க ரஷியா மறுத்துள்ளது.
  • இந்த விலை வரம்பு ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும்.

  மாஸ்கோ:

  ரஷியாவில் இருந்து வரும் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் ஆக ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ளது.

  ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஜி7-ல் சேர்க்கப்பட்டுள்ள பணக்கார நாடுகள் இந்த விலை வரம்பை நிர்ணயித்துள்ளன. மேலும், ரஷியாவிலிருந்து உலகிற்கு வரும் எண்ணெய் தடையின்றி தொடர்ந்து வழங்குவதே இதன் நோக்கமாகும்.

  ரஷிய எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது, அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை ஆஸ்திரேலியா மற்றும் ஜி-7 நாடுகளும் ஆதரித்துள்ளன.

  உக்ரைன் போர் தொடங்கிய பின், ஐரோப்பிய ஒன்றியம் ஜி-7 நாடுகளும் ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு தடை விதித்துள்ளன.

  இதற்கிடையே, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை வரம்பு ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எண்ணெய் விநியோகம் சீராக கிடைத்திட வழி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை ரஷியா ஏற்க மறுத்து இந்த முடிவை நிராகரித்துள்ளது.

  ×