என் மலர்
இந்தியா
- நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
- டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தொடர்புடையவர்களை தப்பிக்க விட மாட்டோம்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
* குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
* கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உண்மை மக்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்.
* டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தொடர்புடையவர்களை தப்பிக்க விட மாட்டோம்.
* டெல்லி கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல் ஆணையர், என்ஐஏ டி.ஜி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. காணொலி வாயிலாக கலந்து கொண்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல் ஆணையர், என்ஐஏ டி.ஜி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. காணொலி வாயிலாக கலந்து கொண்டுள்ளார்.
டெல்லி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மீது சிறப்பு கவனம் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, நேற்று மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.
மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது. இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
- 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
- கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.
- செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தவிர எஞ்சிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் இன்று ஒருநாள் மூடப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் (லால் கிலா மெட்ரோ நிலையம்) மூடப்படுகிறது.
செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தவிர எஞ்சிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- பூடான் மன்னருடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார்.
இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.
பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- ஹோட்டல்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.
- ஹோட்டல் பதிவேடுகளையும் போலீசார் சரிபார்த்தனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பஹர்கஞ்ச், தர்யாகஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஹோட்டல் பதிவேடுகளையும் போலீசார் சரிபார்த்தனர். அப்போது, சந்தேகப்படும்படியான 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேற்றிரவு தடயவியல் துணை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் இன்று மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
- கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்பட்டுள்ளது.
- இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது அமைச்சக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
- தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 122 தொகுதிகளில் 136 பெண்கள் உட்பட 1,302 போட்டியிட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பீகார் சட்டமன்றத் தேர்தலில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
- வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் இரண்டாம்கட்ட தேர்தலில் 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.
- இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற நிலையில் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.
இதற்கிடையே ரேகா குப்தா வெளியிட்ட இரங்கல் எக்ஸ் பதிவில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.






