என் மலர்
இந்தியா

காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற சசி தரூர்: கண்டு கொள்ளாத ராகுல் காந்தி
- சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
- கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தை சசி தரூர் எம்.பி. புறக்கணிப்பார் என கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டத்தில் இருப்பேன். கூட்டத்தைப் புறக்கணிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கி மகிழ்ந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை.
அவருடன் பேசுவதை தவிர்த்தார்.






