என் மலர்
நீங்கள் தேடியது "Quality check"
- மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளை ஆய்வு செய்யும்.
- தரமற்ற மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதுதான் இதன் நோக்கம்.
புதுடெல்லி:
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளை ஆய்வுசெய்து அவற்றின் தரத்தை கணக்கிட்டு வருகிறது. தரமற்ற மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதுதான் இதன் நோக்கம்.
இந்நிலையில், மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் [CDSCO] கடந்த டிசம்பர் மாதம் நடத்திய பரிசோதனையில் 167 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறிந்துள்ளது.
கடந்த டிசம்பரில் மத்திய மருந்து ஆய்வுக்கூடங்கள் 74 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும், மாநில மருந்து பரிசோதனை கூடங்கள் 93 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும் கண்டுபிடித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன.
- கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
கோவில்பட்டி:
பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன. இந்தக் கருவிகள் மூலம் எரி பொருட்களின் தரத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களோ அல்லது பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளோ சோதனை செய்து பார்ப்பது வழக்கம்.
ஆனால் தற்பொழுது இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனி மூலம் வாடிக்கையாளர்களே பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.
தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார். பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் சுசிலா வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சோதனை செய்து உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்களும் இந்த செய்முறையை செய்து பார்த்தார்கள்.
அதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் அளவு சரியாக உள்ளதா என்ற சோதனையும் செய்து காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மைக்கேல் அமலதாஸ் மற்றும் அமலி அமலதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.






