என் மலர்tooltip icon

    இந்தியா

    • நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் 19 பேர் பெண்கள், 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடுவாழ் இந்தியர்கள், 16 பேருக்கு மறைவுக்கு பிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த கவுரவம் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் 'வந்தே மாதரம்' பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும்.

    விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.

    நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

    நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

    நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.

    'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவீதம் பெண்களுடையது என தெரிவித்தார்.

    • ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
    • அண்மையில் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

    இந்திய விண்வெளி வீரரான, இஸ்ரோவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவிற்கு இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2025 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

    சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு இவர் இரண்டாவது வீரர் ஆவார். அண்மையில் உத்தரப் பிரதேச அரசால் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. லக்னோவைச் சேர்ந்த ஷம்பு தயாள் மற்றும் ஆஷா தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையாக ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. 

    முன்னதாக ஒரு பேட்டியில், விண்வெளி வீரராக வேண்டும் என்பது உங்களது சிறுவயது கனவா என்று கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, 

    "இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984-இல் விண்வெளிக்குப் பயணம் செய்தார்; நான் 1985-இல் பிறந்தேன். அவர் விண்வெளிக்குச் சென்றபோது நான் பிறக்கவில்லை, ஆனால் அவருடைய கதைகளைக் கேட்டும், அவருடைய படங்களைப் பார்த்தும், விண்வெளியில் இருந்து அவர் அனுப்பிய செய்திகளைப் பாடப்புத்தகங்களில் படித்தும் நாங்கள் வளர்ந்தோம். அவருடைய பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அப்போது தோன்றவில்லை, ஏனெனில் அப்போது நம் நாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் இல்லை." என்று தெரிவித்திருந்தார். 

    • 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாக பொது வாழ்வில் ஒரு முக்கிய குரலாக இருந்தார்.
    • 19 பெண்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.

    கடந்தாண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று காலமான அச்சுதானந்தன், கேரள அரசியலில் ஒரு உயர்ந்த நபராகவும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாக பொது வாழ்வில் ஒரு முக்கிய குரலாக இருந்தார்.

    இதுதவிர கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், எஸ்என்டிபி யோகம் பொதுச் செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசனுக்கு பத்ம ஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பட்டியலில், ஐந்து பத்ம விபூஷன் விருதுகள், 13 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது அறிவிக்கப்பட்டவர்களில் 19 பேர் பெண்கள், ஆறு பேர் வெளிநாட்டினர். பதினாறு விருதுகள் மரணத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    • ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் கடந்தாண்டு காலமானார்.
    • ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரான ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் கடந்தாண்டு காலமானார்.

    81 வயதான ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் இறக்கும்போது ராஜ்யசபா எம்.பியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்தது.
    • ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது

    மகாரஷ்டிராவின் மும்பையில் புறநகர் ரெயிலில் கல்லூரி பேராசிரியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழந்தவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அலோக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    நேற்று மாலந்த் ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்கும்போது ரெயிலில் அவருடன் பயணித்த சக பயணி ஒருவர் அவரது வயிற்றில் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்ப்பியோடியுள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில், ரெயிலில் இருவருக்கும் இடையே சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம்  காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாக என்று தெரிய வந்துள்ளது. 

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

    ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே  இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
    • என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.

    ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர்,  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்துள்ளார்.

    எனவே தனது மனைவியை ஒரு சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.

    தனது கிராமத்திலிருந்து கட்டாக் சென்று, மீண்டும் அங்கிருந்து வீடு திரும்பியது என மொத்தம் 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கடந்துள்ளார்.

    "என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். அதனால் தான் நான் ரிக்ஷாவிலேயே அவரை அழைத்துச் சென்றேன்." என்று அம்முதியவர் இதுகுறித்து பதில் அளித்துள்ளார். 

    இந்தச் சம்பவம் இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது. இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

    • தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
    • 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகனுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த நிகழ்வில் தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியும் கலந்து கொண்டார். 

    ஆனால் தேஜஸ்வி யாதவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேஜஸ்வியின் பதவி உயர்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரோகிணி ஆச்சார்யா, "அரசியலின் உச்சம் - ஒரு வகையில், ஒரு மனிதனின் புகழ்பெற்ற இன்னிங்ஸின் மகத்தான இறுதிப் போட்டி; தங்கள் கைகளில் பொம்மையாக மாறிய இளவரசரின் முடிசூட்டு விழாவிற்காக, அந்தச் ஜால்ராக்களுக்கும் 'ஊடுருவல் கும்பலுக்கும்' வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து திடீரென ஓய்வு எடுத்து, தனது தாய்வழி குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார் ரோகிணி ஆச்சார்யா. 

    தேஜஸ்வியின் அரசியல் பயணம்

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தனது தந்தை கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோது கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளப்பட்டார். தேஜஸ்வி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015-ல் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணியில், 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    இந்த துணை முதலமைச்சர் பதவியும், 2017-ல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறியபோது திடீரென முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணி முறிவு, தேஜஸ்வியை எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளியது. அப்போது ஆர்ஜேடி அமைப்பை மீண்டும் வலுப்படுத்திய தேஜஸ்வி, தனது தேர்தல் பிரச்சார உத்திகளைக் கூர்மைப்படுத்தி, பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு முதன்மையான சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

    2020 சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியை வழிநடத்திய தேஜஸ்வி அதிகாரத்தை கைப்பற்றவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 2022 ஆகஸ்டில் நிதிஷ் குமார் மீண்டும் மகா கூட்டணியுடன் இணைந்தபோது, தேஜஸ்வி இரண்டாவது முறையாகத் துணை முதல்வராகப் பதவியேற்றார். 2024-ல் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் இப்பதவி முடிவுக்கு வந்தது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இருப்பினும், கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


    • கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று.
    • பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 92 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குற்றம்சாட்டி உள்ளார்.

    தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகவும் கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால், மேற்கு வங்காளத்தில் அது அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

    வாக்காளர்கள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு செய்யத் தவறினால், அது வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமர்த்தியா சென் அவரது வாக்காளர் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது பேசுபொருளானது.   

    • இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
    • தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கும்பலின் அச்சறுத்தலால் பயந்துபோன ஒரு இளம் காதல் ஜோடி மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஷாஜஹான்பூரில் நேற்று ஒரு pizza கடை உணவகத்தின் இரண்டாவது மாடியில் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஜோடியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

    அவர்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்தில், இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.

    கீழே விழுந்ததில் அந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  

    • பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது
    • தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆளாத மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், தொந்தரவு அளிக்கவும் ஆளுநர்களை "கைப்பாவைகளாக" பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.

    கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கார்கே, பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரைகளை வாசிக்க வேண்டாம் என்று அவர்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார். 

    "இது கர்நாடகாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது," என்று அவர் கூறினார். தொடர்ந்து கர்நாடக அரசுக்கும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்ட கார்கே, ஆளுநர்கள் வேண்டுமென்றே மசோதாக்களைத் தாமதப்படுத்துவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும், மேலும் ஆட்சி நிர்வாகத்தை முடக்குவதற்காக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாகவும் கூறினார்.

    "தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அரசு நாட்டை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மாற்றம் குறித்து பேசிய கார்கே, மக்களின் நலன் சார்ந்த சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறினார்.

    "எந்தவொரு கட்சியும் எப்போதும் ஆட்சியில் இருப்பதில்லை, ஆனால் நாடு நிலையானது," என்று கூறிய அவர், பாஜக அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் விட ஆர்எஸ்எஸ் மற்றும் தனது கட்சிக்கே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

    • தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
    • கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், அனைத்து வகையான கலாச்சாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

    மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இது தொடர்பாக பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது. மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.

    மேலும், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    அதன் பெயர் 'மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்'. கடந்த மாதம், மலேசியாவில் 'லால் பாட் சேலை'அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சேலைக்கு நமது வங்காளக் கலாச்சாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு.

    இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக ஒரு சாதனையை நிகழ்த்தியது, இது மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×