என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தேர்தல் செய்திகள்

அவனியாபுரம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது மாவட்டங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக பிரிக்கிறார்கள்? என்று தெரியவில்லை. நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். இவர்கள் காஷ்மீரை போல தமிழகத்தை 2-ஆக உடைக்க வாய்ப்புள்ளது.
சாதிய கட்சிகளை அதிகமாக நம்புவது பாரதீய ஜனதா. அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள். சென்னை, புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். தமிழகத்தை 2 ஆக பிரிப்பது அவசியமற்றது. அதை விடவும் கூடாது.
மாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாடுதுறை:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.
காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முப்படைகளுக்கு தனித்தனி தளபதிகள் இருந்தனர். இப்போது ஒரே தளபதி என்று மாற்றியிருப்பது இந்தியாவை பொருத்தவரை இது ஒரு அவசியமற்ற செயலாகும்.
சில நாடுகளில் தவிர்க்க முடியாமல் ராணுவ புரட்சியால் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ராணுவத்திற்கு முப்படைகளின் தலைமைக்கு ஒரே தலைவர் என்பது அவசியமற்ற மாற்றம்.
மத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் தலையீடு செய்கிறது. தற்போது ராணுவத்திலும் தலையிட்டு வருகிறது.
நடுத்தர மக்கள் அதிகமாக உபயோகிப்பது பால். அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கு எந்தவித வழிவகையும் செய்யவில்லை.
தமிழகத்தில் பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மாநில அரசு அதிகமாக பாலின் விலையை உயர்த்துவது என்பது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரையில் அந்த மாநிலம் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு அதுதான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் தலையீடு காஷ்மீர் விவகாரத்தில் இருக்கக் கூடாது என்பதும் காங்கிரசின் நிலைப்பாடு.
சிறப்பு அந்தஸ்து 370-ஐ மாற்றக் கூடாது என்று நாங்கள் சொல்ல வர வில்லை. அப்படி மாற்றுகிற போது அந்த மாநில மக்களின் சம்மதத்தோடு மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். காஷ்மீர் மக்களின் ஆதரவோடு செய்ய வேண்டிய விசயத்தை ஆளுநர் ஆட்சி அமைத்து, காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த தலைவர்களை கைது செய்துள்ளனர். இன்னும் பலபேர் சிறைக்கைதிகளாக உள்ளனர்.
மக்களுக்காக பாடுபட கூடிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் வைத்து விட்டு காஷ்மீரில் என்ன சீர் திருத்தத்தை செய்யப் போகிறார்கள். மத்திய அரசு அமைப்புகளால் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளாக இருக் கட்டும், தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவன வேலை வாய்ப்புக்களாக இருக் கட்டும் தமிழ்நாட்டில் இருக் கக்கூடியவர்களுக்கு வேலை கிடைப்பது கிடையாது.
வேறு மாநிலத்தவர்களுக்கே வேலை கிடைக்கிறது. மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பா.ஜனதா எண்ணம் பலிக்காது. பா.ஜனதாவை பாராளுமன்றத்தில் அதிகமாக விமர்சனம் செய்து பேசியவர் வைகோ.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத் தான் முதல்வர் லண்டன் செல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு எங்களை குறை கூறுவது தான் வேலை.
மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காகத் தான் வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார்.
பா.ஜனதாவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். தேசியத்தின் பார்வையில் பா.ஜனதா எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அ.தி.மு.க.வை கவர்ந்துள்ளது. தி.மு.க. பிரிவினையை தூண்டக் கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிக்க கூடியவர்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சிறு எறும்புக்குக்கூட இடையூறு இருக்காது. தி.மு.க.பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர் என்கிற பட்டியலில் தி.மு.க. மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும். மாட்டினால் மாட்டியது தான்.
எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்.
கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல. திடீரென வருவார்கள் போய் விடுவார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு வித்தியாசம் லட்சக்கணக்கில் இருந்தது. இந்த சாதனை வெற்றிக்கு பின்னர் 3 மாதத்திற்கு பிறகு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஒரு கடுமையான போரை எதிர்கொண்டு வெற்றி பெற்றுது போல், 8,141 ஒற்றைப்படை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்குறித்து அவரது தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உங்கள் மகன் பெற்ற வெற்றியில் திருப்தியடைகிறீர்களா? இது எதிர்பார்த்த வழியில் இருந்ததா?
பதில்:- நாங்கள் எப்போதும் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தோம். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று.
கேள்வி:- பொதுத்தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு பிறகு குறுகிய வெற்றி வித்தியாசத்திற்கு என்ன காரணம்?
பதில்:- பொதுத்தேர்தலின் போது வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தால் விளைவு வேறுபட்டிருக்கும்.
இது கேரளாவில் அட்டுகலில் பொங்கலைக் கொண்டாடுவது போன்றது. எல்லோரும் திருவிழாவில் பங்கேற்கும்போதுதான் அது பண்டிகை தோற்றத்தை அளிக்கும்.
ஒரு நபர் பொங்கலை வழங்கும்போது, அந்த உணர்வு பொதுவான பொங்கலைப் போல மகிழ்ச்சியாக இருக்காது.
மேலும், தொகுதியில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு, அதன் கீழ் வரும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் 5 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டது.
மாதிரி நடத்தை விதிமுறை, அரசு அறிவிப்புகள் வெளியிடுவதைத் தடைசெய்தாலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதை ஒரு தாலுகா தலைமையகமாக மாற்றுவதாக உறுதியளித்தார்.

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில், வேலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிப்பதாக அவர் உறுதியளித்தார்
இந்த வாக்குறுதிகள் மாதிரி நடத்தை விதிகளை மீறும் வகையில் செய்யப்பட்டன. அவர்கள் தவறான வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்கள் மனதை குழப்பினர்.
தி.மு.க. தவறான வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் குற்றம் சாட்டினார். உண்மையில், அவரும் அவரது அமைச்சர்களும் தான் தவறான வாக்குறுதிகளை அளித்தனர்.
கேள்வி:- தி.மு.க.வின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் பங்களித்தன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வாக்குப்பதிவு நாளில் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததும் காரணமா?
பதில்:- பொதுத்தேர்தலில் கூட முஸ்லிம்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். எனவே காஷ்மீர் பிரச்சனைக்கும், தேர்தல் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இடைத்தேர்தல்களில் ஆம்பூர், குடியாத்தம் உட்பட 13 சட்டமன்ற இடங்களை நாங்கள் வென்றோம்.
கேள்வி:- மாநிலத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கும், மத்திய அரசில் கூட்டணியாக இருக்கும் வேட்பாளருக்கும் வாக்களிப்பது தங்களுக்கு பயனளிக்கும் என்று வாக்காளர்கள் நம்பினார்களா?
பதில்:- அமைச்சர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று உள்ளூர் பகுதி மேம்பாட்டுக்கு வாக்குறுதிகள் அளித்தனர்.
ஒரு பகுதியில், 8 நாட்களில் குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர். அமைச்சர்களால் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டதால் பொது மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது.
கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் மேல்அரசம்பட்டில் அணை கட்டுவதாக அமைச்சர் ஒருவர் உறுதியளித்தார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ற திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்ததன் மூலம் அவர்கள் வாக்காளர்களை ஏமாற்றினர்.
கிராமங்களில் உள்ளவர்கள் பொதுவாக காஷ்மீர் போன்ற பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உள்ளூர் பிரச்சனைகள் குறித்து அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முதலியார் சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றார் என்பது உண்மைதானா? அதே போல் வன்னியர்கள் கதிர்ஆனந்துக்கு முழுமையாக ஆதரவளிக்கவில்லையா?
பதில்:- வாக்காளர்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் வேறுபடுத்த நான் விரும்பவில்லை. முதலியார்கள் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்திருந்தால், முதலியார்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் அதிக வாக்குகளை பெற்றிருக்க மாட்டோம். சுமார் 40,000 முதலியார்களைக் கொண்ட குடியாத்தத்தில் அவர் எதிர்பார்த்த ஓட்டு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
