என் மலர்
நீங்கள் தேடியது "நாம் தமிழர் கட்சி"
- தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தொகுதிகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டார்.
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.
- திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.
அப்போது, எஸ்ஐஆர் குறித்து பேசிய சீமான்," மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் கொண்டு வரும் போது மம்தா பானர்ஜி அதை எதிர்த்து மக்களை திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு எஸ்ஐஆர் செயல்படுத்த போகிறோம் என்று தெரிவித்த உடன் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது" என்றார்.
இதற்கு பத்திரிகையாளர் ஒருவர் எஸ்ஐஆரை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளதே என்று கூறினார்.
இதற்கு உனடியாக ஆதங்கப்பட்ட சீமான் உனக்கு என்ன பிரச்சனை? உன்னை ரொம்ப நாளா பார்த்துக் கொண்டிருக்கிறேன், உனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துள்ளது. என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினார்.
இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
நெல்லை:
நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து தொடர்ச்சியாக மாநாடு நடத்தப்படுகிறது.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு-மாடு, மரங்களின் மாநாடு மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை, கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் 'ஆதி நீயே, ஆழித்தாயே' என்ற முழக்கத்தை முன்வைத்து கடலம்மா என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
அதன்படி இன்று மாலை நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் இந்த கடலம்மா மாநாடு சீமானின் மற்ற மாநாடுகளை போல சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
- மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
- எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்?
திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்?
ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?
ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்?
குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை
- மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.
கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.
அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.
மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு நடைபெற்றது.
தண்ணீர் மாநாட்டில் பேசிய சீமான், "கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. மக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு யாரும் போட்டியில்லை.
தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை. ரத்தநாளம் போன்றது ஆறுகள்; அதில், அணை கட்டுவது ஸ்டோக்குக்கு ஒப்பானது. மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
- சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
- மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
பூதலூர்:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.
கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.
அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.
மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நாளை மாலை (15-ந் தேதி) தண்ணீர் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள திறந்தவெளி திடல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.
திடலின் முகப்பில் மாமன்னன் கரிகாலன், விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலின்முகப்பு பகுதியில் ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி, பல்லுயி ர்க்கும் பகிர்ந்தளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மாநாட்டு திடலில் இருபுறங்களிலும் ஒரு பகுதியில் மாமன்னன் கரிகாலனின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு பகுதியில் காவிரி ஆறு பாய தொடங்கும் குடகு முதல் பூம்புகார் வரையிலான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் இன்று திருச்சி வருவார் என்று கூறப்படுகிறது.

மாநாட்டு திடலின் முகப்பு தோற்றத்தை காணலாம்.
நாளை மாலை 4 மணிக்கு பூதலூரில் தொடங்கும் தண்ணீர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இந்த மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநாட்டு திடல் பகுதியில் திருவையாறு தொகுதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மாமன்னன் கரிகாலன் மற்றும் காவிரி ஆற்றின் வரலாற்று காட்சிகளை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளன. இவற்றை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் காவிரி படுகையின் தலைப்பு பகுதியான பூதலூரில் நடைபெற உள்ள இந்த தண்ணீர் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
- நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு.
- கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
சென்னை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன, இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன.
இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும்.
"ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
- பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.
பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.
நீடு வாழ்க இளவல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
- நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என விதவிதமான அசைவ உணவுகள் சீமான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கட்சியினருக்கு பரிமாற்றப்பட்டது. இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சூடாக பரிமாறப்பட்ட பிரியாணி உள்பட அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.
கைதேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு சீமான் வீட்டு வளாகத்திலேயே அசைவ உணவுகள் சமைக்கப்பட்டன. அதனை கல்யாண வீடுகள் போன்று சேர், டேபிள்கள் போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது.
- நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரமாக மாறி உள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டு பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.
ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.
துரோகத்தைப் பற்றி, சமூக நீதி, சுயமரியாதை பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழன் என்று வந்தால் பார்ப்பனர்கள் நானும் தமிழன் என்று உள்ளே வந்து விடுவார் என்று வீரமணி போன்றவர்கள் பேசுகிறார்கள்.
அதே கருத்தை தான் அ.தி.மு.க.வினரும் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா தலைமையை இவர்கள் எப்படி ஏற்றார்கள்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் பா.ஜ.க. தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்து பார்க்கிறார்கள். அப்போதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும்.
ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. 2 மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும். பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டு வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செய்கிறார்கள்.
அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றும் ஒரு பீகாராக மாறிவிடும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நான் சொன்ன அதே கருத்தை தான் நடிகர் அஜித்தும் தெரிவித்து உள்ளார். இந்த முறையே தவறு, இது போன்ற கலாச்சாரமே தவறு என்று தான் அஜித் கூறுகிறார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் பொதுவான இடத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் அங்கு வந்து பேசிவிட்டு செல்லட்டும். மக்கள் அதை பார்த்து ஓட்டு போடட்டும். இதைத்தான் அவரும் சொல்கிறார்.
மற்ற நாடுகளில் இங்கு செய்வது போன்ற பிரசாரம் போன்ற நிலை இல்லை.
வருகின்ற தேர்தலில் இங்கு கட்சிகளுக்கு போட்டி அல்ல கருத்துகளுக்கு தான் போட்டி. நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உடன் இருந்தார்.
- மதுரையில் காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
- கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியைத் தருகின்றது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களைக் கொண்டு வெற்று விளம்பரம் செய்துவிட்டு, கல்விக்கண் திறந்த கடவுள் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தைச் செயற்பட முடியாதபடி முடக்குவது வன்மையானக் கண்டனத்துக்குரியது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக 1978 ஆம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. 18 பாடசாலைகளுடன், 72 திணைக்களங்களை கொண்டுள்ள இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும், 7 மாலைநேரக் கல்லூரிகளையும் உறுப்பு கல்லூரிகளாகக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியையும் பெற்றுத் திகழ்வதோடு, 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பயில வாய்ப்பளித்து பல இலட்சம் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது.
அத்தகு சிறப்பு வாய்ந்த காமராசர் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாகக் கடும் நிதி நெருக்கடி காரணமாக முற்று முழுதாக முடங்கிப்போயுள்ளதுதான் பெருங்கொடுமையாகும்.
காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை.
பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஆண்டுக்குமான தணிக்கை அறிக்கைகள், நிதி நெருக்கடிகள் ஏற்பட பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில் முதன்மையானது 17.05.1999 நாளிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குத் தரப்படும் சம்பளம் மற்றும் படிகள் ஆகியன தமிழ்நாடு அரசால் ஈடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
கடந்த 2007 மற்றும் 2008 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசால் பல்கலைகழகத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை 7 கோடியே 74 லட்சம். அது கடந்த 17 ஆண்டுகளில் அதிகரித்து 2023-24 ஆம் நிதி ஆண்டுகளில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத்தொகை தமிழ்நாடு அரசால் தரப்படவில்லை. ஒருவேளை நிலுவைத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் 500 கோடி அளவிற்கு உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் எனவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
ஆனால், நிலுவைத்தொகையைத் தராமல் இருப்பதற்கு, பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் விதிமீறல் நடைபெற்றதே காரணம் என அரசு கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றபோதே அதனை தமிழ்நாடு அரசு தடுக்கத்தவறியது ஏன்? பணி நியமனத்தில் முறைகேடு என்றால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வழங்க வேண்டிய நிதியை நிறுத்துவது எவ்வகையில் நியாயமாகும்?
மேலும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்விதுறை 2010 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 50,000 மாணவர்களைக் கொண்டிருந்தது, அதே துறை 2023 ஆம் ஆண்டில் வெறும் 6000 மாணவர்களையேக் கொண்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் இந்திய ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூரக் கல்வியானது அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற புதிய விதியை நிர்ணயித்து, பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தியதேயாகும். இதனால் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறைந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956 இன் படி, அவ்வாணையத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று பல்கலைக்கழகங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதாகும். ஆனால், இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிமுறை அதற்கு நேரெதிராக நிதியைக் குறைக்கச் செய்து, மாணவர்களின் கல்வியை முடக்கியுள்ளது. இதற்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசே முழுக்காரணமாகும்.
பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகத்தின் சிறகுகளை வெட்டாவிட்டால், காமராஜர் பல்கலைக்கழகம்
பத்து மடங்கு கூடுதல் நிதியைத் தொலைதூரக் கல்வித்துறையின் மூலம் ஈட்டியிருக்க முடியும். பல்கலைக்கழகமும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த தவறியதோடு, பல்கலைகழகப் பணியாளர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகளையும், பணிவிதிகளையும் ஏற்படுத்த தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியமும் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கெட மற்றுமொரு காரணமாகும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இது தவிர பட்டதாரிகளுக்கான 15 உறுப்பினர் பதவிகளும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளன. உதவிப்பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல், தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாணவர்களின் உயர்கல்வியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை.
பாஜக ஆளுநர் - திமுக அரசின் மோதல் போக்கு தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முற்று முழுதாகச் சீரழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களை இத்தகைய மோசமான நிலையில் வைத்துவிட்டு கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடானது.
பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டு முதல்வரே செயல்படுவார் எனும் நிலையை எட்டிய பிறகும் திமுக அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைச் சீர்படுத்தி, நிதிநிலைமையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு உயர் கல்வியிற் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ள முறையா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு மதுரை காமராசர் பல்கலைகழத்திற்குத் தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கி மூடப்படும் நிலையிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும். மேலும், சீரழிந்துள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தையும் சீரமைத்து, நிதி நிலைமையை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.






