என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை.
    • அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகின்றனர்.

    இதற்கிடையே, நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். 100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

    டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்தப் பயணத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் தனது பயணத்திற்கு டி.ஜி.பி. தடைவிதித்த நிலையில், அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அன்புமணி ராமதாஸ் நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கினார்.
    • டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகின்றனர்.

    இதற்கிடையே, நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

    அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.

    100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

    டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்தப் பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கங்கை கொண் சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல்.

    தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ. 381 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை (சனிக்கிழமை) இரவு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் முதல் ரூ.200 கோடியில் அமைக்கப்பட்டு முடிவுற்ற 6 வழிச்சாலை திட்டப் பணி என மொத்தம் ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.

    தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    குருவாலப்பர் கோவில் இடத்திற்கு பதிலாக பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட் அருகே உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளதால் விமானியின் அறிவுரையின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் 100 நாட்கள் நடைபயணம்.
    • 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.

    'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அன்புமணி நடைபயணத்தை தொடங்கினார்.

    சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்திய அரசியல் சாசனப்படி அனைவரும் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    • அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.
    • மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?

    புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நடைபெற்று வருகிறது.

    மக்களவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொடு வருகிறார்.

    அங்கு, எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு பேசியதாவது:-

    இரவு, பகல் பாராமல் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால் தான் ரகுபதிக்கு பதவி வழங்கப்பட்டது.

    அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.

    அதிமுக கொடுத்த அடையாளத்தை வைத்து தானே மாற்றுக் கட்சிக்கு சென்றார் ரகுபதி. மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?

    திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. என் வீட்டிற்கு ரூ.4,000 என்று வந்த மின்கட்டணம் தற்போது ரூ.12,000 வரை வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்று தகவல்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்றும், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையுடன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • 2021-23 வரை 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர்.
    • ரூ.397 கோடி இழப்பு தொடர்பாக வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி வழக்கு.

    தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

    ரூ.397 கோடி இழப்பு தொடர்பாக வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், அதிமுக நிர்வாகி வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    2021-23 வரை 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மக்கள் பிரதிநிதி, அரசுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகாரில் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விஜிலென்ஸ் நடவடிக்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவுடன் தேர்வான 4 எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மேல் சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களில் இருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை அடிப்படையில் எம்.பி.க்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் 18 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த 18 எம்.பி.க்களில் வில்சன், சண்முகம், அப் துல்லா (3 பேரும் தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), அன்புமணி (பா.ம.க.) ஆகிய 6 எம்.பி.க்களின் பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய கடந்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 12-ந்தேதி அந்த மனுக்கள் மீது பரிசீ லனை நடந்தது. போட்டி ஏற்படாததால் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் பாராளுமன்ற மேல்சபைக்கு ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார்கள்.

    அவர்களில் வில்சனுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்து எம்.பி.யாக்கி இருக்கிறது. தி.மு.க. சார்பில் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார்.

    அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் எம்.பி. பதவிக்கு நிறுத்தப்பட்டு தேர்வாகி உள்ளனர். இந்த 6 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்வானதை கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்த நிலையில் புதிதாக தேர்வான மேல்சபை எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நேற்றும், இன்றும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கமல் ஹாசன், இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் பதவி ஏற்றனர்.

    கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவுடன் தேர்வான 4 எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமை களையும் சங்கநாதமென முழங்கியவர்.

    1978-ல் முத்தமிழறிஞர் கலைஞரால் முதன்முறையாக மாநி லங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அண்ணன் வைகோவின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81-வது வயதில் மாநிலங்க ளவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

    திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்க ளின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அண்ணன் சண்முகம் ஆற்றிய பணி களுக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் என் பாராட்டு களைத் தெரி வித்துக்கொள்வதுடன், அவருடைய தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளு மன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட தம்பி எம்.எம்.அப்துல்லா, தனது பதவிப் பொறுப்பு நிறைவடையும் நாளிலும் மதநல்லிணக்க அடையாளமான கோரிக்கையை முன் வைத்தன் மூலம் கழகத்தின் வார்ப்பு என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

    சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும்-நீதிமன்றங்களில் வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண் டும் தன்னுடைய அழுத்த மான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்.

    அவருக்கும், மாநி லங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களு டைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற மேல்சபை யில் தமிழகம் சார்பில் இடம் பெற்றுள்ள 18 எம்.பி.க்க ளில் 10 பேர் தி.மு.க. எம்.பி.க்கள் ஆவார்கள். தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் எம்.பி. ஒருவரும், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் எம்.பி.யாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆதரவுடன் ஜி.கே. வாசன் எம்.பி.யாக இருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் மேல்சபைக்கு தேர்வான தர்மர் சில மாதங்களுக்கு ஓ.பி.எஸ். ஆதரவு நிலை எடுத்ததால் அவர் சுயேட்சை எம்.பி.யாக உள்ளார்.

    பாராளுமன்ற மேல்சபை தமிழக எம்.பி.க்களில் சமீபத்திய மொத்த வருகை நாட்களான 315 நாட்களில் தி.மு.க.வின் வில்சன் எம்.பி. 300 நாட்கள் சபை நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ளார். சண்முகம் 280 நாட்களும், சந்திரசேகரன் 215 நாட்க ளும், அப்துல்லா 212 நாட்க ளும் பங்கேற்றுள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 178 நாட்கள் சபை நடவடிக்கைளில் பங்கேற்றுள்ளார். மிக குறைவாக பா.ம.க. தலைவர் அன்புமணி 92 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

    • டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக கட்சி நிர்வாகிகளின் பணி குறித்து விஜய் ஆய்வு செய்தார்.
    • பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு யூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த இருப்பதாக அறிவித் தார்.

    அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை விஜய் நேரடியாக சந்திக்க இருக்கிறார். த.வெ.க. கொள்கை மற்றும் விஜயின் மாறுபட்ட அரசியல் குறித்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தினந்தோறும் வீடுகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இது ஒருபுறமிருக்க சென்னை நந்தனத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள த.வெ.க. தேர்தல் வியூக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று திடீரென சென்று விஜய் ஆலோசனை நடத்தினார். த.வெ.க.வின் தற்போதைய செயல்பாடுகள், தேர்தல் வியூகங்கள் வாக்காளர் மத்தியில் கட்சியை கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சமூக வலைதளங்கள் வழியாக மக்களை சென்றடைய வேண்டிய திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக கட்சி நிர்வாகிகளின் பணி குறித்தும் விஜய் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பட்டியலை விஜய் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில்,

    பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். நிர்வாகிகள் நியமனத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தினமும் நேரில் செல்ல வேண்டும். 2 வாரங்களுக்கு ஒரு முறை சேகரித்த விபரங்களை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    விஜயின் திடீர் உத்தரவு த.வெ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
    • திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு தென் கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் 'அப்பர் கயிலை காட்சி விழா' வெகு விமரிசையாக நடந்தது.

    முன்னதாக நேற்று காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். தொடர்ந்து, மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    பின்னர், இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிகர நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது.
    • மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் மரியாதை கிடையாது. நேர்மையாக பணியாற்றுபவர்களை உடனடியாக சஸ்பெண்டு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல என்று கூறினார்.

    மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திப்பது குற்றம் என்றால், முதலமைச்சரும், அவரது மகனும் சென்று அவர் வீட்டு கதவை தட்டினார்களே அதற்கு பெயர் என்ன? அவர்கள் சந்தித்தால் தவறு இல்லை. நாங்கள் சந்தித்தால் தவறு. இந்திய நாட்டுடைய உள்துறை மந்திரிதானே அவர். வேறு யாரும் இல்லையே. அவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.

    நான் டெல்லி சென்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடப்பாடி டெல்லி சென்றிருக்கிறார் என்று கருத்து தெரிவித்தார். ஏதோவொரு சூழ்நிலையில் அமித்ஷாவை சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனைகளை கூறுங்க என்று அவரே சொல்லிவிட்டு, இப்படியான கேள்விகளை அவர்களே கேட்பது நியாயம் தானா?.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவருடைய அமைச்சர்களும் அனைத்து இடங்களிலும் சொல்வது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்கிறார்கள். அவர்கள் கூறிய 525 அறிவிப்புகளில் ஒரு 10 அறிவிப்புகளை முன்வைத்து புதிய பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். ஸ்க்ராட்ச் கார்டுகள் மூலமாக அ.தி.மு.க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வழங்கி அவர்கள் நிறைவேற்றப்பட்டது எது? நிறைவேற்றப்படாதது எது? என கேள்வி எழுப்பி உள்ளோம்.

    அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது. மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நானும் கிராமத்தில் உள்ளவன்தான். ஒரு தோட்டத்தில் வீடு இருந்தால் அனுமதி வாங்க சொல்வது நியாயம். அனுமதி வாங்கலைன்னா உடனே சீல் வைக்கலாம் என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ரூ.7 ஆயிரத்து 50 கோடிக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். தாலிக்கு தங்கமும் கொடுத்து கொண்டுதான் இருந்தோம். இந்த 4 ஆண்டு ஆட்சியில்தான் கொடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில்தான் லேப்டாப்க்கு என்று டெண்டர் அறிவிக்க முடியாமல் ஓராண்டு காலம் எல்லா பணிகளும் தள்ளிப்போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் அதனை கைவிட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்களை எல்லாம் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைவிட்டு விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டி இருந்தார்.
    • தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா கூறியிருந்தார்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.

    மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.

    ×