என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பூத் கமிட்டி அமைப்பதில் திடீர் குளறுபடி - த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் எச்சரிக்கை
    X

    பூத் கமிட்டி அமைப்பதில் திடீர் குளறுபடி - த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் எச்சரிக்கை

    • டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக கட்சி நிர்வாகிகளின் பணி குறித்து விஜய் ஆய்வு செய்தார்.
    • பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு யூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த இருப்பதாக அறிவித் தார்.

    அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை விஜய் நேரடியாக சந்திக்க இருக்கிறார். த.வெ.க. கொள்கை மற்றும் விஜயின் மாறுபட்ட அரசியல் குறித்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தினந்தோறும் வீடுகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இது ஒருபுறமிருக்க சென்னை நந்தனத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள த.வெ.க. தேர்தல் வியூக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று திடீரென சென்று விஜய் ஆலோசனை நடத்தினார். த.வெ.க.வின் தற்போதைய செயல்பாடுகள், தேர்தல் வியூகங்கள் வாக்காளர் மத்தியில் கட்சியை கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சமூக வலைதளங்கள் வழியாக மக்களை சென்றடைய வேண்டிய திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக கட்சி நிர்வாகிகளின் பணி குறித்தும் விஜய் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பட்டியலை விஜய் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில்,

    பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். நிர்வாகிகள் நியமனத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தினமும் நேரில் செல்ல வேண்டும். 2 வாரங்களுக்கு ஒரு முறை சேகரித்த விபரங்களை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    விஜயின் திடீர் உத்தரவு த.வெ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×