என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
- தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டி இருந்தார்.
- தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா கூறியிருந்தார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.
மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.






