என் மலர்
நீங்கள் தேடியது "AnbuMani Ramadas"
- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை திருப்போரூரில் தொடங்கினார்.
- இந்த நடைபயணத்தை 100ம் நாளில் தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.
தர்மபுரி:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பிரசார பயணத்தை திருப்போரூர் தொகுதியில் கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கினார்
100 நாட்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற அவர், தனது நடைபயணத்தை தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.
இந்நிலையில், தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
மன உளைச்சல், மன அழுத்தத்தில் தான் இந்த நடைபயணத்தை தொடங்கினேன். அடுத்த 108-வது நாளில் தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்.
தி.மு.க. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 13 சதவீத வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 100-க்கு 13 மதிப்பெண்தான். எனவே பெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு விடமாட்டோம்.
இந்த நடைபயணத்தில் நிறைய கத்துக்கிட்டேன். இந்த நடைபயணம் வாயிலாக நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிட்டது.
திமுக டெல்டாவை அழித்துவிட்டார்கள். 60 ஆண்டு காலம் ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக இந்த டெல்டாவை எந்த ஒரு அடிப்படையும் இல்லாதவையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான ஒரு ஆட்சி இதுவரைக்கும் நாம் பார்த்தது கிடையாது என தெரிவித்தார்.
- தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பா.ஜ.க. விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை பனையூரில் உள்ள இல்லத்தில் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்துப் பேசியது அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
- பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம்.
- அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார்.
சென்னை:
பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக அன்புமணியை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை ராமதாஸ் வகுத்துள்ளார். அரசியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கள நிலவரத்தை ராமதாஸ் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்.
பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம். அதில் இருந்துதான் அரசியல் இயக்கமாக பா.ம.க. உருவானது. எனவே வன்னியர்கள் ஆதரவை பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். வன்னியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். இதனால் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு ராமதாசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இளைய தலைமுறையினரும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களும் அடுத்தகட்டமாக பா.ம.க.வை அன்புமணி தான் வழி நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். எனவே அவர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஆதரவு இருக்கிறது.
இந்த சூழலில் அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார். வருகிற 14-ந்தேதி முதல் வன்னியர்கள் பகுதியில் கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
இந்த மாவட்டங்களில் செல்லும்போது வன்னியர்களுக்கான தனது உழைப்பை எடுத்து சொல்லி அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
- ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் 100 நாட்கள் நடைபயணம்.
- 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.
'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அன்புமணி நடைபயணத்தை தொடங்கினார்.
சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசனப்படி அனைவரும் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 என்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாநில இணை செயலாளர் புருஷோத்தமன், கிரீஸ் சரவணன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது:-
தமிழகத்தில் மக்களை கடுமையாக பாதிக்கின்ற வகையில் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சாதாரணமாக இருநூறு ரூபாய் கட்டிய பொதுமக்கள் இன்று 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால், கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்காது. எனவே தமிழக அரசு மின் கட்டணத்தை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்த வேண்டும்.நீர் வீணாகும்போது காவிரியில் ஏன் தடுப்பணைகளை கட்டவில்லை. தடுப்ணைகளை கட்டி விட்டால் மணல் திருட முடியாது. இதனாலே தடுப்பணைகளை கட்டவில்லை.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்காக மக்கள் போராட்டம் நடத்திய போது இரண்டு முறை வந்து நானும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். இப்படி நல்ல விஷயங்களுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும்.மக்கள் வளர்ச்சியை மட்டுமே வைத்து பா.ம.க. செயல்படகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்லடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உதாரணமாக மத்திய அரசின் கல்வி நிலையங்களில் தகவல் தொடர்பு மொழியாக உள்ள ஆங்கிலத்திற்கு பதிலாக இனி இந்தியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனக்கு தாய் மொழி தமிழ், நான் விருப்பப்பட்டு மற்ற மொழிகளை கற்கலாம். ஆனால் நீ இந்தி தான் கற்க வேண்டும் என சொல்வது போல உள்ளது.
மத்திய அரசின் இந்த செயல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வானொலி நிலையத்தில், தமிழ் நிகழ்ச்சிகளை 4 மணி நேரம் ரத்து செய்துவிட்டு அதில் இந்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறார்கள். அதை எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? இப்படி இந்தி திணிப்பு செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தினால் இதுவரை 80 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மிகக் கடுமையான நடவடிக்கை அவசியம். அதேபோல போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் கடுமையாக பின்பற்ற வேண்டும். தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும். அது இ.பி.எஸ். பிரச்சினையாக இருந்தாலும் சரி ஓ.பி.எஸ்.பிரச்சினையாக இருந்தாலும் சரி.
இவ்வாறு அவர் கூறினார்.






