என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இவ்வளவு மோசமான ஆட்சியை இதுவரை பார்த்தது கிடையாது: அன்புமணி ராமதாஸ்
    X

    இவ்வளவு மோசமான ஆட்சியை இதுவரை பார்த்தது கிடையாது: அன்புமணி ராமதாஸ்

    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை திருப்போரூரில் தொடங்கினார்.
    • இந்த நடைபயணத்தை 100ம் நாளில் தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.

    தர்மபுரி:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பிரசார பயணத்தை திருப்போரூர் தொகுதியில் கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கினார்

    100 நாட்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற அவர், தனது நடைபயணத்தை தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.

    இந்நிலையில், தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    மன உளைச்சல், மன அழுத்தத்தில் தான் இந்த நடைபயணத்தை தொடங்கினேன். அடுத்த 108-வது நாளில் தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்.

    தி.மு.க. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 13 சதவீத வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 100-க்கு 13 மதிப்பெண்தான். எனவே பெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு விடமாட்டோம்.

    இந்த நடைபயணத்தில் நிறைய கத்துக்கிட்டேன். இந்த நடைபயணம் வாயிலாக நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிட்டது.

    திமுக டெல்டாவை அழித்துவிட்டார்கள். 60 ஆண்டு காலம் ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக இந்த டெல்டாவை எந்த ஒரு அடிப்படையும் இல்லாதவையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான ஒரு ஆட்சி இதுவரைக்கும் நாம் பார்த்தது கிடையாது என தெரிவித்தார்.

    Next Story
    ×