என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புதுறை"
- 2021-23 வரை 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர்.
- ரூ.397 கோடி இழப்பு தொடர்பாக வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி வழக்கு.
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
ரூ.397 கோடி இழப்பு தொடர்பாக வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், அதிமுக நிர்வாகி வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
2021-23 வரை 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மக்கள் பிரதிநிதி, அரசுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகாரில் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விஜிலென்ஸ் நடவடிக்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.







