என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவையில் பதவியேற்ற 6 தமிழக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவுடன் தேர்வான 4 எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மேல் சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களில் இருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை அடிப்படையில் எம்.பி.க்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் 18 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 18 எம்.பி.க்களில் வில்சன், சண்முகம், அப் துல்லா (3 பேரும் தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), அன்புமணி (பா.ம.க.) ஆகிய 6 எம்.பி.க்களின் பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய கடந்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 12-ந்தேதி அந்த மனுக்கள் மீது பரிசீ லனை நடந்தது. போட்டி ஏற்படாததால் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் பாராளுமன்ற மேல்சபைக்கு ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார்கள்.
அவர்களில் வில்சனுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்து எம்.பி.யாக்கி இருக்கிறது. தி.மு.க. சார்பில் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் எம்.பி. பதவிக்கு நிறுத்தப்பட்டு தேர்வாகி உள்ளனர். இந்த 6 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்வானதை கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்வான மேல்சபை எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நேற்றும், இன்றும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கமல் ஹாசன், இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் பதவி ஏற்றனர்.
கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவுடன் தேர்வான 4 எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமை களையும் சங்கநாதமென முழங்கியவர்.
1978-ல் முத்தமிழறிஞர் கலைஞரால் முதன்முறையாக மாநி லங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அண்ணன் வைகோவின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81-வது வயதில் மாநிலங்க ளவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது.
திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்க ளின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.
அண்ணன் சண்முகம் ஆற்றிய பணி களுக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் என் பாராட்டு களைத் தெரி வித்துக்கொள்வதுடன், அவருடைய தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.
மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளு மன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட தம்பி எம்.எம்.அப்துல்லா, தனது பதவிப் பொறுப்பு நிறைவடையும் நாளிலும் மதநல்லிணக்க அடையாளமான கோரிக்கையை முன் வைத்தன் மூலம் கழகத்தின் வார்ப்பு என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும்-நீதிமன்றங்களில் வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண் டும் தன்னுடைய அழுத்த மான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்.
அவருக்கும், மாநி லங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களு டைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற மேல்சபை யில் தமிழகம் சார்பில் இடம் பெற்றுள்ள 18 எம்.பி.க்க ளில் 10 பேர் தி.மு.க. எம்.பி.க்கள் ஆவார்கள். தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் எம்.பி. ஒருவரும், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் எம்.பி.யாக உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆதரவுடன் ஜி.கே. வாசன் எம்.பி.யாக இருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் மேல்சபைக்கு தேர்வான தர்மர் சில மாதங்களுக்கு ஓ.பி.எஸ். ஆதரவு நிலை எடுத்ததால் அவர் சுயேட்சை எம்.பி.யாக உள்ளார்.
பாராளுமன்ற மேல்சபை தமிழக எம்.பி.க்களில் சமீபத்திய மொத்த வருகை நாட்களான 315 நாட்களில் தி.மு.க.வின் வில்சன் எம்.பி. 300 நாட்கள் சபை நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ளார். சண்முகம் 280 நாட்களும், சந்திரசேகரன் 215 நாட்க ளும், அப்துல்லா 212 நாட்க ளும் பங்கேற்றுள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 178 நாட்கள் சபை நடவடிக்கைளில் பங்கேற்றுள்ளார். மிக குறைவாக பா.ம.க. தலைவர் அன்புமணி 92 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.






