என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார்.
    • சிறப்பு விருந்தினராக நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி கடற்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.

    இயக்கத்தின் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார். காணிமடம் தபஸ்வி பொன். காமராஜ், வள்ளலார் பேரவை தலைவர் பத்மனேந்திர சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.



    முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.

    • கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

    பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080

    08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    11-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    10-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    09-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    08-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
    • வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.

    அதில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."

    "பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."

    "இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்..

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள்.

    கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பேருந்து - ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.

    • விமான நேரம் மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.
    • புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றம்.

    சென்னை விமான நிலையத்தைச் சுற்றுயுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால், விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    போகி பண்டிகை புகைமூட்டம் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு 108 விமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட புறப்பாடு மற்றும் வருகை விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி, பெங்களூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது.
    • போகி பண்டிகை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்து வந்தது.

    இதனால் போகி பண்டிகை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.

    அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

    குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

    இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.

    இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

    • டிசம்பர் மாதம் 27-ந்தேதி புத்தகக் காட்சி தொடங்கியது.
    • 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு.

    48-வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்ற இந்த புத்தக காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த புத்தகக் காட்சிக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்ததாகவும், 20 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாகவும் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்தள்ளார்.

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "24H துபாய் 2025 இல் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."

    "இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித் குமார் ரேசிங் அணிக்கு நன்றி கூறுகிறேன்."

    "நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் பெருமை சேர்ப்பதில் அஜித் சார் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மூன்று நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் கூறியிருந்தார்.

    தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 6ஆம் தேதி துவங்கியது. இந்தக்கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டிவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

    ஆளுநர் உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில் அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரின் செயலுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதுகுறித்து பேசும் போது, ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் கூறியிருந்தார்.

    முதலமைச்சரின் கருத்து பதில் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."

    "பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."

    "இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.
    • அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

    தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தே.மு.தி.க.வில் இருந்தபோது இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது.

    எனவே தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

    ×