ஆளுநர் ஆர்.என்.ரவிக்குதான் திமிர் அதிகம்- அமைச்சர் துரைமுருகன் காட்டம்

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்குதான் திமிர் அதிகம்- அமைச்சர் துரைமுருகன் காட்டம்
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.

அதில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."

"பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."

"இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்..

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com