என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TN Governor RN Ravi"
- சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
- பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூருக்கு தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, தனது மகன் ராகுல்ரவியுடன் நேற்று வந்தாா்.
சுற்றுலா மாளிகையில் தங்கிய இருவரும் தஞ்சாவூா் அரண்மனைக்குச் சென்றனா். அங்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார்.
பின்னா் அரண்மனை வளாகத்திலுள்ள சந்திரமௌலீசுவரா் கோயிலுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா். இதையடுத்து, அருகிலுள்ள சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
மாலையில் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்றாா். அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
வராஹி அம்மன், மராட்டா விநாயகா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா்.
பின்னா், தாண்டவ மாடியின் மீது ஏறி பாா்வையிட்ட அவா், மகா நந்திகேசுவரரை வழிபட்டு, சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டாா்.
இதையடுத்து, காா் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.
இதற்கிடையே தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவியை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் (வயது 35) என்பதும் ஆர்வமிகுமியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர்தீனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
- மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி
- பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இன்று 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலைக்கழகம் மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என மொத்தம் 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே கடந்த 2 பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்க வில்லை. தொடர்ச்சியாக இன்று கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் காரணமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை இங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சந்திரமவுலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொருளாளர் ராமசுப்பிரமணியம், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார்.
அதன் பின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தோல்வியை கண்டு துவளாமல் பின் வாங்கிச் செல்லாமல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக ஜொலிக்க முடியும்.
வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் நேர மேலாண்மை , கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை இயற்கை மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரைகள் தான். எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலும் அதற்கு பிறகும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
- ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
- ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்.
தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.
- புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை:
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திறந்து வைத்தார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் நாட்டில் தயாரான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
வெகு விமரிசையாக நடைபெற்ற பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமரை பாராட்டி 'டுவிட்டரில்' பதிவிட்டு இருப்பதாவது:-
நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ் காலத்தையும், பிரகாசமான எதிர் காலத்தையும், பிரதி பலிக்கும் நமது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.
புனித செங்கோலை அதிகாரமாற்ற கலாசாரம் மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகவும், நியாயமான ஆளுகையை தொடர்ந்து நினைவூட்டவும், பாராளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் பாராட்டி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்