என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பிரதமரின் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்திருந்தார்.
    • இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக கூட்டணி வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

    பிரதமரின் SHRI திட்டத்தில் கேரள மாநில இணைய இருப்பதாக, அம்மாநில அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்திருந்தார். ஆனால், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை பெறுவதற்காகத்தான் அந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் தற்போது உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையிலான ரகசிய கூட்டணி, பிரதம்ர் SHRI திட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.

    • நெல்லையில் இருந்து இரவு 11.55 மணிக்கு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மறுமார்க்கமாக வியாழக்கிழமை சென்னையில் இருந்து ரெயில் புறப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கான சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் நாளை முதல் சென்னை திரும்புவார்கள். இதனால் வழக்கமான பேருந்துகள், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

    தமிழக அரசு சிறப்பு பேருந்துக்கள் இயக்குகிறது. அதேபோல் தெற்கு ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

    இந்த நிலையில் நாளைமறுநாள் புதன்கிழமை நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    2 ஏசி மூன்றடுக்கு, 9 படுக்கை வசதி, 4 பொதுப்பெட்டிகளுடன் மதுரை, திருச்சி, அரியலூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    • கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார்.
    • இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி கோவா கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடினார்.

    ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்தபோது, பிரதமர் மோடி மிக் 29 கே போர் விமானங்களால் சூழப்பட்ட விமான தளத்திற்குச் சென்றார்.

    பிரதமர் மோடி முன்பு ஐஎன்எஸ் விக்ராந்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பல்வேறு தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள். இதில் ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப்படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் அவர்களால் எழுதப்பட்ட பாடல் அடங்கும்.

    கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார். இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,

    ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி ஒரு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். இதனையடுத்து அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

    • கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    அல்மாட்டி:

    கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

    இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    சுமார் 882 நாட்களுக்குப் பிறகு மெத்வதேவ் வெல்லும் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
    • 20 பிணைக்கைதிகள் உயிரோடு விடுவிக்கப்பட்டனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன.

    ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, "காசா முனையில் பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதுகாப்பு படைகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    எனினும் தாங்கள் போர் நிறுத்தத்தை கடைபிடித்து வருவதாககும், சொந்த தாக்குதலை மீண்டும் தொடங்க இஸ்ரேல் சாக்குபோக்கில் ஈடுபடுவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இன்று அதிகாலை, ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி ரஃபா பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க செயல்படும் இஸ்ரேல் படைகள் மீது பயங்கரவாதிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர் என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில்தான் நேதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 20ம் தேதி அன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் பாடல் 'GOD MODE' நாளை வெளியாகும் நிலையில், இப்பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகியுள்ளது.

    • மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
    • எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறான செய்தி என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகர், தேனியில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

    புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எந்தளவு மழை பெய்தாலும் பாதிப்புகளை தவிர்க்க தயாராக உள்ளோம்.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை அதிகளவில் பெய்த மாவட்டங்களில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சொல்வது தவறான செய்தி.

    நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது.
    • அங்கு இடம் கிடைக்காததால் தனியாக போட்டியிட முடிவு.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத இருவருக்கும வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதில் அக்கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இம்ரான் பெயரும் இடம் பிடித்துள்ளது. இக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தூதுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால் தனியாக போட்டியிட முடிவு செய்தது.

    • தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.

    அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    * தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * வரும் 22-ந்தேதி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * வரும் 23-ந்தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வரும் 24-ந்தேதி 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * வரும் 25-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டியூட் படத்திற்கு கதாநாயகியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
    • டியூட் படம் மக்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றுள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    டியூட் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டிய நிலையில், 2 நாட்களில் ரூ.45 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறுவதில்லை.
    • 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

    சீனா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலை இளைய தலைமுறையினர் தவிர்க்கத் தொடங்கியுள்ளது அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால், திருமணம் மற்றும் குழந்தை பெறுதலில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசுகள் அதிக சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில், இந்தியாவுக்கு நேர்மாறாக மக்கள்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் பெண்கள் மத்தியில் புதிய கலாசாரம் ஒன்று வேகமெடுத்து வருகிறது.

    அங்குள்ள வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தர குடும்பப் பெண்கள், வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' என்று அழைக்கப்படும் ஆண்களைப் வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.

    'கென்ஸ்' என்றால் என்ன? என்ற தலைப்பில் இதுதொடர்பான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

    அதில், 'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக இது உருவாகியுள்ளது.

    இந்த ஆண்கள் சமையல், சுத்தம் செய்தல், வீட்டு வேலைகள், ஷாப்பிங் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். மேலும், ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும் இருக்கிறார்கள்

    உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்டவர்களே கென்ஸ்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    இவர்கள் பெண்களிடம் ஒருபோதும் வாதிட மாட்டார்கள். மேலும், சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.

    இந்தக் கலாசாரம் தலைதூக்க முக்கிய காரணம், வசதிபடைத்த பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரிய உறவில் இருக்கும் எந்தவொரு கட்டாயமான பொறுப்புக்கும் கட்டுப்பட விரும்புவதில்லை என்பதுதான்.

    இதற்கு உதாரணமாக, 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களைச் சுழற்சி முறையில் மாற்றிக்கொள்வதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தக் காணொளி 4.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை ஈர்த்து வருகிறது. 

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
    • ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரரான ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்த போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா, 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் 5ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    ×