என் மலர்
இந்தியா

பீகார் தேர்தல்: 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தது ஒவைசி கட்சி
- இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது.
- அங்கு இடம் கிடைக்காததால் தனியாக போட்டியிட முடிவு.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத இருவருக்கும வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதில் அக்கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இம்ரான் பெயரும் இடம் பிடித்துள்ளது. இக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தூதுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால் தனியாக போட்டியிட முடிவு செய்தது.






