என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக நாளைமறுநாள் நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில்
- நெல்லையில் இருந்து இரவு 11.55 மணிக்கு ரெயில் இயக்கப்படுகிறது.
- மறுமார்க்கமாக வியாழக்கிழமை சென்னையில் இருந்து ரெயில் புறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கான சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் நாளை முதல் சென்னை திரும்புவார்கள். இதனால் வழக்கமான பேருந்துகள், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
தமிழக அரசு சிறப்பு பேருந்துக்கள் இயக்குகிறது. அதேபோல் தெற்கு ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
இந்த நிலையில் நாளைமறுநாள் புதன்கிழமை நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
2 ஏசி மூன்றடுக்கு, 9 படுக்கை வசதி, 4 பொதுப்பெட்டிகளுடன் மதுரை, திருச்சி, அரியலூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.






