என் மலர்
சினிமா செய்திகள்

பெரிய நடிகர்களை ஓவர்டேக் செய்த பிரதீப்... டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
- டியூட் படத்திற்கு கதாநாயகியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
- டியூட் படம் மக்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டியூட் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டிய நிலையில், 2 நாட்களில் ரூ.45 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Next Story






