என் மலர்
சினிமா செய்திகள்
- ஷங்கர் தாதா சிந்தாபாத், வாண்டட், ரவுடி ராத்தோர், தபங் போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கினார்.
- ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். பின் தெலுங்கு திரையுலகில் "நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா." என்ற படத்தின் மூல இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தின் ரீமேக்தான் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடித்து வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம்.
பின் அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தை இயக்கினார். மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ஒரு மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பார்.
போக்கிரி படத்திற்கு பிறகு இந்தி திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார் ஷங்கர் தாதா சிந்தாபாத், வாண்டட், ரவுடி ராத்தோர், தபங் போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கினார்.
தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்று 51- வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபுதேவாவிற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பின் சினு இயக்கத்தில் ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா மற்றும் வேதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் பேட்ட ராப். படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் போஸ்டரை பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
- சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
பிரபல நடிகை ஜோதிகா- நடிகர் சூர்யா இணைந்து 1999 -ம் ஆண்டு இயக்குனர் வசந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்தனர்.
சூர்யா- ஜோதிகா மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் 2006 -ல் திருமணம் செய்தனர், இவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஜோதிகா ஷைத்தான் படத்தில் நடித்தார்.தற்போது மேலும் சில இந்தி படங்களில் ஜோதிகா நடிக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
ஜோதிகா, சூர்யா இருவரும் சிறந்த நடிகர்கள் மட்டும் அல்ல. உடற்தகுதி மீது வெறி கொண்டவர்கள். தற்போது சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் வியந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார்.
- இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.
பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த "ஹேராம்" என்ற படத்தில் வல்லபபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த "லக்" என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அதிக ஆர்வம் உண்டு.இவரது இசை திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் 'தேவர் மகன்' படத்தில் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலை பாட வைத்தார்.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் ஸ்ருதி பாடிய "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் குறிப்பிடத்தக்கது. இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது.பல விருதுகள் பெற்றுள்ளார்.
2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் ஆகியோருடன் நடித்து உள்ளார்.
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார்.டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகி உள்ளார்.

இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பில் ஸ்ருதி தற்போது இணைந்துள்ளார். மேலும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருந்த Njan Prakashan என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் அபர்ணா தாஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகியிருந்த 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படத்தில் கவின், பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபக் பரம்போல் என்பவரை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறார். இவரும் நடிகர் தான். சமீபத்தில் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் இவர் நடித்திருக்கிறார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடித்த தீபக் பரம்போல்-அபர்ணா தாஸிற்கு ஏப்ரல் 24ஆம் தேதி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அட்வென்ச்சர், ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக கள்வன் உருவாகி இருக்கிறது.
- இந்த படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தொடர்பாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.வி. ஷங்கர் கூறும்போது, "சில ஜானர் படங்கள் மொழி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன்."
"ஆக்ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது."
'கள்வன்' படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்."
"இவானா திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் உருவாகியுள்ளது.
- இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராயல் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கும் புதிய படம் "நெவர் எஸ்கேப்." புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.
பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி ஜெ சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் குமார் எஸ்.ஜே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், நடன இயக்குநருமான ராபர்ட், "இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது."
"மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் அனுமதி வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
- இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் யோகி பாபு ஒருவர். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரஜினிகாந்தை கலாய்த்தும், கிண்டல் செய்தும் மக்கள் மனதை கவர்ந்திருப்பார்.
யோகி பாபுவிற்கு பலப்படங்கள் லைன் அப்பில் இருந்தாலும். அதில் ஒன்று அவர் நடித்து வெளிவரப் போகும் படம் "மிஸ் மேகி." இதில் அவர் வயதான பெண்மணி வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார். இவர் செல்வராகவன் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி படக்குழுவினர் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்திற்கு கே.யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி ஃபேமிலி ஸ்டார்'.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுக்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் இப்படக்குழ கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, '' தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்."
"சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் 'அர்ஜுன் ரெட்டி'க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன்."
"இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்க இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும்... காதலிப்பதிலும்... நேசிப்பதிலும்... கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன் தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
- இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடி வரை வசூலை ஈட்டியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் புஷ்பா -2 படத்தின் டீசர் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தண்ணா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்ற பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த போஸ்டரில் சலங்கையிட்ட கால் ஒன்று நடனம் ஆடுவதுப்போல் இடம் பெற்றுள்ளது. புஷ்பா-2 திரைப்படம் எந்த கதைச்சூழலில் நடக்கப்போகிறது என தெரியவில்லை. இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட்
- தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட். பின் பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'ஈர நிலம்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் பெரும் அங்கிகாரம் கிடைத்தது போஸ் வெங்கட்டிற்கு.
பின் தீபாவளி, தாம் தூம், வேதா, தலை நகரம், சரோஜா, கோ, சிங்கம் போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.
இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இதனை போஸ் வெங்கட் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.
- வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் - 2' படத்தை இயக்க தொடங்கினார்.
இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது 'இந்தியன்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எனவே விரைவில் இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் முடிந்ததும் இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
- பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
சென்ஷேசன், குட்டி ஸ்டார் ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் யூடியுபில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க பிரபலமானவர் குட்டி ஸ்டார் ஷோபா பாய். கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய ஷோபா விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீன இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் பீ-ரெடி மியூசிக் நிறுவனம், ஷோபா பாய் நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், முதல் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.
முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






