சோஃபா பாயின் புதிய டிரெண்டிங் வீடியோ

பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
சோஃபா பாயின் புதிய டிரெண்டிங் வீடியோ
Published on

சென்ஷேசன், குட்டி ஸ்டார் ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் யூடியுபில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க பிரபலமானவர் குட்டி ஸ்டார் ஷோபா பாய். கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய ஷோபா விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீன இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் பீ-ரெடி மியூசிக் நிறுவனம், ஷோபா பாய் நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், முதல் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.

முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com