என் மலர்
சினிமா செய்திகள்
- அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
- இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.
ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
- வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.
ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பாடலான "டோண்ட் வொரி மச்சி, டோண்ட் வொரி மச்சி மற்றும் "எதனால" பாடல் வெளியாகி ஹிட்டாகியது.
இப்பொழுது ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பித்துள்ளது. படத்தில் பேனர்களையும் போஸ்டர்களையும் ஏந்திய 5 எல்.இ.டி வேன்கள் பிரத்தியேகமாக தயார் படுத்தியுள்ளனர். இந்த வேன்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறது.


இயக்குனர் ஹரி மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர் அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ஹரி "முன்னடி மாட்டு வண்டி இருந்தது அதில் படப் போஸ்டர்களை ஒட்டி ஊர் ஊராக சென்றனர், இப்பொழுது அது வேனாக மாறி இருக்கிறது. முடிந்த அளவுக்கு படம் மக்களுக்கு வெளியாகிறது என்று தெரிய வைக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்ப்பார்கள்" என்ரு கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார்.
- நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கென கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். அவர் நடிப்பில் ஜனவரி மாதம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர்-1 படம் வெளியாகியது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அருண் விஜய் அடுத்த படம் நடிக்கவிருக்கிறார். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் திருக்குமரன் " எப்படி சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே ஒரு திருப்பு முனை படமாக அமைந்ததோ , அதேப் போல் அருண் விஜய் - க்கும் ஒரு முக்கியமான படமாக அமையும். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார்
- முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். நாளை ( 5- ந்தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டிக்காக அவர் ஐதராபாத்தில் உள்ளார்.
இந்நிலையில் இன்று நடராஜன் தனது 33-வது பிறந்தநாளை பிரபல நடிகர் அஜித் குமாருடன் கேக் வெட்டி ஐதராபாத்தில் கொண்டாடினார்.
பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார். இருவரும் மாறி, மாறி கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பிறந்தநாள் பார்ட்டியின் போது அஜித் - நடராஜன் இருவரும் வெள்ளை நிற உடையில் இருந்தனர்.

அப்போது இலங்கையைச் சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகின.
தற்போது பிரபல நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்
- இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மார்ச் 22 ஆம் தேதி ஜி.வி பிரகாஷ் நடிப்பில் "ரெபெல்" திரைப்படம் வெளியாகியது.
- நாளை ஜி.வி பிரகாஷின் அடுத்த படமான கள்வன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 22 ஆம் தேதி ஜி.வி பிரகாஷ் நடிப்பில் "ரெபெல்" திரைப்படம் வெளியாகியது. அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வெளியாகி மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்று வந்தது.
இந்நிலையில் படத்தின் பாடலான 'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோ யுடியூபில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இப்பாடலின் காட்சி பரவி வருகிறது.
நாளை ஜி.வி பிரகாஷின் அடுத்த படமான கள்வன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார்.
- சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.
கடந்த மாதம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். ஒரு மாதம் முழுவதும் எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சமூக வலைத்தளங்களில் 'கண்மணி அன்போடு காதலன்' பாட்டு மிகவும் வைரலாகியது.
படத்தை பார்த்து பல தமிழ் பிரபலங்களான கமல், ரஜினிகாந்த, விக்ரம் , சித்தார்த் என பலர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 220 கோடி ரூபாய் வசூலித்துல்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நடிகர் விக்ரம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்கவுள்ளார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்தப் பின் விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சியான் 2024 ஆம் ஆண்டு வரிசையாக மிக சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார்.
தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார். சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.
சியான் 62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.
பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.
3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.
இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.
இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மும்பையின் பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா கட்டி வருகின்றனர்
- புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இந்தி பட உலகின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் - முன்னணி நடிகை ஆலியாபட் ஜோடி கடந்த 2022 -ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டு உள்ளது.
ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் அரண்மனை போன்று பல்வேறு வசதிகள் கொண்ட பிரமாண்ட பங்களா ஒன்று கட்டி வருகின்றனர்.மேலும் ரன்பீர்சிங் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய 'ஸ்வான்கி' கார் ஒன்றை சமீபத்தில் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று பங்களா கட்டுமான பணியை பார்வையிடுவதற்கு மனைவி ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோருடன் ரன்பீர் சிங் காரில் வந்தார். அந்த புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் அந்த காரை போட்டோக்கள் எடுத்தனர். மேலும் இணைய தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த கார் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் மும்பையில் மிகவும் விலை உயர்ந்த கார் வைத்து இருக்கும் நடிகர் என்ற பெயரை ரன்பீர் சிங் தற்போது பெற்று உள்ளார்.
இந்நிலையில் ரன்பீர் புதிய படமான 'ராமாயணம்' என்ற படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். இதற்காக க்ளீன் ஷேவ் செய்து , மெலிந்த மாஸ்குலர் உடல் அமைப்புடன காணப்படுகிறார். படத்துக்காக 'வில்வித்தை' பயிற்சியும் பெற்றுள்ளார்.
அயோத்தியில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட செட் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் நடுப்பகுதியில் ரன்பீர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
- அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.
பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
- சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.
சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.
ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்
- புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.
நக்கலும் நையாண்டித்தனமுமாக பேசுவதில் வல்லவர் பார்த்திபன். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இவர் இயக்கிய புதிய பாதை சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
இதுவரை பார்த்திபன் 15 படங்களை இயக்கியுள்ளார்., 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.
பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே படம் முழுக்க நடித்திருப்பார். இதில் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாகும். இப்படத்தை இயக்கி நடித்தற்காக மிக பெரிய பாராட்டை பெற்றார் பார்த்திபன்.
பின் 2022 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டீன்ஸ்' படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு திகில் திரில்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் சென்ற வாரம் வெளியிடப்பட்டது.
படத்தின் டிரெயிலர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிரத்னம் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






