என் மலர்
சினிமா செய்திகள்
- தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.
- நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ், குழந்தைகள் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் .
தமிழ்த் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்'-ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் நயன்தாராவின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக அங்கு தங்கி உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா கொச்சியில் உள்ள எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களால் ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்து வருகின்றன.

நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக காரில் வந்து ஒரு கடை முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் நயன்தாரா.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரூ.1,000 கோடி பொருட்ஸ்லவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராமாயணம் திரைப்படம் தயாராகிறது
- இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர்
ராமாயணம் கதையை மையமாக வைத்து நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அனுமாராக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது.
ரூ.1,000 கோடி பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் தயாராகிறது. படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் படக்குழு ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இசையமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஜிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
லயன் கிங், இன்டெர்ஸ்டெல்லர், மேன் ஆப் ஸ்டீல், டார்க் நைட் டிரிலாஜி, இன்செப்சன் போன்ற படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகளை வாங்கியுள்ளார். இவர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் இரண்டு ஆஸ்கார் வெற்றியாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். ஹான்ஸ் ஜிம்மர் இந்திய படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
- சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார்.
'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்தது.
இறுதிகட்ட ஷூட்டிங் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட இருந்தது. இதற்கான 'ஷூட்டிங்' லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டார்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார். அந்த குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடினார்.இந்த வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
- இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது

.மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.
மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.
மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைவர்- 171 படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகர் ஷாருக்கானை இணைந்து நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டதாகவும் அதனை ஷாருக்கான நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

\
இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூப்பர் ஹீரோ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
- திரைக்கதையை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. அவர் நடிக்கும் பல்வேறு படங்கள் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களை மகிழ்வித்தன. இந்த வரிசையில், பிரபு தேவா நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

"மின்மேன்" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் பிரபு தேவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரவீன் & சதீஷ் இயக்குகின்றனர். காஷ்யப் இசையமைக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இந்தியாவின் புதிய சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் மின்மேன் பற்றிய இதர அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
- இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கி இருக்கும் புதிய படம் "டியர்." ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது ஆகும். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு இடம்பெற்றுள்ளார். வீடியேவில் வெங்கட் பிரபு படத்தின் டிரைலரை பார்க்க ஆரம்பிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது.
- இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் கவின் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்களும் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,
கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.
இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ இன்று வெளியாகியது. இதில் கவின் ஒரு கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் காதலியைப் பார்த்து பாடுவதாக காட்சிகள் அமைந்து இருக்கிறது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார்.
- மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து ஐ, தெறி, மிஷன் சாப்டர்-1 உள்பட தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அடுத்ததாக ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட எமிஜாக்சன் தனது காதலர் எட்வெஸ்ட் விக், மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வெஸ்ட் விக்குடன் நடந்த நிச்சயதார்த்த விருந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

தற்போது மகனுடன் ஜாலியாக மரத்தில் ஏறி விளையாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமிஜாக்சன். புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதிய வீட்டில் இது எங்களின் முதல் வசந்தகாலம் என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
- இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். சித்து குமார் இசையமைக்கிறார். இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றூம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது
- இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமாவின் புகழ் உச்சியில் இருக்கிறது. அதை தொடரும் விதமாக மார்ச் 28 ஆம் தேதி பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியது. படத்தை பார்த்துவிட்டு பலப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.
பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும் . இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.
படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த ஆர்.டி.எக்ஸ், நேரு, பீஷ்மபரவம் போன்ற படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆடு ஜீவிதம் படம் 7 நாட்களில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை படக்குழுவினர் நேற்று இந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும், முக்கிய இயக்குனர்களுக்கும் திரையிட்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படக்குழுவினரிடம் பாராட்டு மழையை பொழிந்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
- என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என்றார்.
பெங்களூரு:
நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என பதிவிட்டுள்ளார்.
- இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180"
- இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180". இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அதுல் போசாமியா கனத்த இதயத்துடன் அஞ்சலி குறிப்பை வெளியிட்டார். அதில்
அன்புள்ள டேனியல்,
அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது.
உங்களது கடைசி திரைப்படமான 'பிபி 180' இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். உங்கள் சொந்த சேமிப்பில் நீங்கள் ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறீர்கள் என்ற விஷயம் அறிந்து நாங்கள் வியந்தோம். உங்களுடன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த கோயில் இல்லாமல் இன்னும் இரண்டு கோயில்கள் கட்ட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஒன்று சிவனுக்கு, இன்னொன்று லட்சுமிக்கு. கடந்த மாதம் நீங்கள் குஜராத்துக்குச் சென்றிருந்தீர்கள். அப்போது உடன் வந்த நாங்களும் சோம்நாத் ஜோதிர்லிங் மற்றும் ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆகிய இடங்களை தரிசித்தோம். அங்கு நீங்கள் ருத்ர அபிஷேகம் செய்தீர்கள்.

உங்கள் எல்லைக் கடந்த திறமைக்கு அப்பால், நீங்கள் ஒரு கனிவான மற்றும் கருணையான நபர். எப்போதும் உதவிக் கரம் நீட்டவும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தீர்கள். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடைய சோர்ந்து போன நாட்களைக் கூட ஒளிரச் செய்தது உங்கள் இருப்பு. மேலும், உங்கள் சிரிப்பு உங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள்.
அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.
ஆழ்ந்த அனுதாபங்களுடனும் என்றென்றும் நன்றியுடனும்,
அதுல் போசாமியா
என குறிப்பிட்டுள்ளார் .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






