search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bp 180"

    • இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180"
    • இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180". இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அதுல் போசாமியா கனத்த இதயத்துடன் அஞ்சலி குறிப்பை வெளியிட்டார். அதில்

    அன்புள்ள டேனியல்,

    அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது.

    உங்களது கடைசி திரைப்படமான 'பிபி 180' இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். உங்கள் சொந்த சேமிப்பில் நீங்கள் ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறீர்கள் என்ற விஷயம் அறிந்து நாங்கள் வியந்தோம். உங்களுடன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த கோயில் இல்லாமல் இன்னும் இரண்டு கோயில்கள் கட்ட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஒன்று சிவனுக்கு, இன்னொன்று லட்சுமிக்கு. கடந்த மாதம் நீங்கள் குஜராத்துக்குச் சென்றிருந்தீர்கள். அப்போது உடன் வந்த நாங்களும் சோம்நாத் ஜோதிர்லிங் மற்றும் ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆகிய இடங்களை தரிசித்தோம். அங்கு நீங்கள் ருத்ர அபிஷேகம் செய்தீர்கள்.

     

    உங்கள் எல்லைக் கடந்த திறமைக்கு அப்பால், நீங்கள் ஒரு கனிவான மற்றும் கருணையான நபர். எப்போதும் உதவிக் கரம் நீட்டவும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தீர்கள். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடைய சோர்ந்து போன நாட்களைக் கூட ஒளிரச் செய்தது உங்கள் இருப்பு. மேலும், உங்கள் சிரிப்பு உங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

     

    நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள்.

    அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.

    ஆழ்ந்த அனுதாபங்களுடனும் என்றென்றும் நன்றியுடனும்,

    அதுல் போசாமியா   

    என  குறிப்பிட்டுள்ளார் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஜேபி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’பிபி 180’.
    • இந்த படத்தின் தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஜேபி எழுதி, இயக்கும் திரைப்படம் 'பிபி 180'. தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    அதுல் இந்தியா மூவிஸ் (ATUL INDIA MOVIES) தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். திரில்லர் ஜானரில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியதாவது, தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குனர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார். இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது.


    கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜேபி. படம் மிகச் சிறப்பாக வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்று கூறினார்.


    மேலும், இயக்குனர் ஜேபி பேசியதாவது, இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் "அஞ்சாதே" படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்று பேசினார்.

    ×