என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபி 180"

    ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    சென்னை காசிமேடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார் தான்யா ரவிச்சந்திரன். இவர் போலீஸ், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் நேர்மையாக இருக்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார்.

    இறுதியில் டேனியல் பாலாஜி தான்யா ரவிச்சந்திரனை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை மீதி கதை.

    நடிகர்கள்

    கதையின் நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரவுடி கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதிக்கு மேல் அவரது கதாபாத்திரம் பலம் இழந்து விடுகிறது.

    முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ.பி. நீயா நானா என்று போட்டி போட்டு நடிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி லாஜிக் மிரல்களை தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    இசை

    பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

    ரேட்டிங்- 2.5/5

    • இயக்குனர் ஜேபி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’பிபி 180’.
    • இந்த படத்தின் தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஜேபி எழுதி, இயக்கும் திரைப்படம் 'பிபி 180'. தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    அதுல் இந்தியா மூவிஸ் (ATUL INDIA MOVIES) தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். திரில்லர் ஜானரில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியதாவது, தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குனர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார். இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது.


    கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜேபி. படம் மிகச் சிறப்பாக வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்று கூறினார்.


    மேலும், இயக்குனர் ஜேபி பேசியதாவது, இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் "அஞ்சாதே" படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்று பேசினார்.

    ×