ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் ஆரம்பம்

நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
ரத்னம் படத்தின் ப்ரோமோஷன்  ஆரம்பம்
Published on

நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.

ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பாடலான "டோண்ட் வொரி மச்சி, டோண்ட் வொரி மச்சி மற்றும் "எதனால" பாடல் வெளியாகி ஹிட்டாகியது.

இப்பொழுது ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பித்துள்ளது. படத்தில் பேனர்களையும் போஸ்டர்களையும் ஏந்திய 5 எல்.இ.டி வேன்கள் பிரத்தியேகமாக தயார் படுத்தியுள்ளனர். இந்த வேன்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறது.

இயக்குனர் ஹரி மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர் அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ஹரி "முன்னடி மாட்டு வண்டி இருந்தது அதில் படப் போஸ்டர்களை ஒட்டி ஊர் ஊராக சென்றனர், இப்பொழுது அது வேனாக மாறி இருக்கிறது. முடிந்த அளவுக்கு படம் மக்களுக்கு வெளியாகிறது என்று தெரிய வைக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்ப்பார்கள்" என்ரு கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com