மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்

நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்
Published on

மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.

பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com