அவருடன் பணியாற்றும் கனவு நிறைவேறியது - ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர்

அட்வென்ச்சர், ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக கள்வன் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் பணியாற்றும் கனவு நிறைவேறியது - ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர்
Published on

ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தொடர்பாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.வி. ஷங்கர் கூறும்போது, "சில ஜானர் படங்கள் மொழி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன்."

"ஆக்ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது."

'கள்வன்' படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்."

"இவானா திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com