என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
    • ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

    தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.

     

    விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

     

    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்
    • கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார்

    டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். டாடா படத்திற்கு அடுத்து ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் காட்சி முன்னோட்டம் நேற்று வெளியானது.

    இதற்கடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது அடுத்ததாக கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேட் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார்.
    • இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், கே.ஆர். கோகுல் ஜிம் ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். வெளியாகி மூன்று நாட்களிலே படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்பொழுது வசூலில் 70 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

    இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலு , மஞ்சும்மல் பாய்ஸ் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரூ. 100 கோடி வசூலை குவித்த படங்கள் வரிசையில் ஆடு ஜீவிதம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

    ஆடு ஜீவிதம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு நிர்வாண காட்சிக்காக நடிகர் பிருத்விராஜ் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை ஒளிப்பதிவாளர் கே.எஸ். சுனில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    இப்படதிற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார். அதுவும் நிர்வாண காட்சிற்காக பிருத்விராஜ் மூன்று நாள் பட்டினி கிடந்து நடித்து இருக்கிறார். அந்த காட்சி எடுக்கும் கடைசி நாளில் தண்ணீர் கூட அவர் குடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சரியான சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் 2 வருடங்களுக்கு மேல் பாலைவனத்தில் இருந்து வாழ்ந்த ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அதை கச்சிதமாக திரையில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி நடித்து இருக்கிறார் பிருத்திவிராஜ். இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்று பலன் கிடைத்து இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.
    • இப்பொழுது அவர் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆடம்ஸ் அறிமுகமானார். இவர் சன் டிவியில் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கினார். இவரின் ஜாலியாக பேசும் திறமையும் , முக பாவனையும் மக்கள் மனதை கவர்ந்தது.

    பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பயணம் செய்தார்,  சன் டிவியின் சிவ சக்தி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்,  தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.

    பிரபல தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் படத்தின் திரைக் கொண்டாட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஆடம் தொகுத்து வழங்குவார். பின் படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

    இப்பொழுது அவர் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார். கேன் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் நடித்து இருக்கும் முன்னணி கதாப்பாதிரங்களின் முகத்தை வைத்து ஒரு வித்தியாசமான ஃபர்ஸ் லுக்காக உருவாக்கியுள்ளார்.

    கோவை சரளா, கலையரசன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், அக்ஷரா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    எட்டு நாட்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை இது என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது ரத்னம் என்ற படத்தை ஹரி இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனர். அவரின் கதை, திரைக்கதை மற்றும் அதை படமாக்கும் விதம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இவர் இயக்கிய சாமி, கோவில், தாமிரபரணி, வேல், சிங்கம் படங்கள் ஹிட்டாகியது.

    தற்பொழுது ரத்னம் என்ற படத்தை ஹரி இயக்கியுள்ளார். விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ஹரியின் மகனான ஸ்ரீராம் ஹரி 'ஹும்' என்ற பைலட் {Pilot} படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் இறுதி ஆண்டு படித்து வரும் ஸ்ரீராம் அவரின் ப்ராஜக்டிற்காக இந்த படத்தை இயக்கி அதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது.
    • இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

    இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.

    இந்நிலையில் வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது. இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை தடபுடலாக நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா.
    • இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது.

    லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.

    இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவரது முதல் படமான ‘புது வசந்தம்’ படம் பல விருதுகளை பெற்றது.
    • இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹிட் லிஸ்ட்’

    'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு படமாகும்.
    • சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

    பிரபல இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து 'ராஜா ராணி' மூலம் இயக்குனராகி பிரபலமானவர் அட்லி. நடிகர் விஜய்யுடன் இணைந்து தொடர் வெற்றிப் படங்கள் கொடுத்தார்.

    இதையடுத்து பாலிவுட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' படத்தை இயக்கினார்.'ஜவான்' திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தை அட்லி இயக்க இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்த தினமான ஏப்ரல் 8- ந் தேதி வெளியாகுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

    தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. புஷ்பா - 2 வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




    இந்நிலையில் அட்லீயின் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் நடிகை சமந்தா ஈடுபட்டு உள்ளார்.அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்ஷன், பொழுதுபோக்கு படமாகும்.இப்படத்தில் சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.அட்லீ -அல்லு அர்ஜுன் புதிய படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது
    • 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டுஅந்த படம் வெளியானது

    நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.

    கமலுக்கு 'விக்ரம்' என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்து உள்ளார். அதேபோல இந்த படத்தையும் எடுக்க லோகேஷ் முடிவு செய்து உள்ளார்.ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.


     


    மேலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் ரஜினியின் கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு சூழப்பட்டிருந்தது.

    அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.இந்நிலையில் தற்போது தலைவர் -171 படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ரஜினியின் புதிய படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    இந்த பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டுஅந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கவின் ஸ்டார் மற்றும் கிஸ் படத்தில் நடித்து வருகிறார்.
    • இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். சின்னதிரை நாயகனாக இருந்து வெள்ளிதிரைக்கு வந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினின் புகழ் ஓங்கியது.

    குருபிரசாத் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு இயக்கத்தில் ஓடிடி யில் வெளியான லிஃப்ட் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

    பின் மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த  டாடா படத்தில் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,

    கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" முன்னோட்டம் இன்று  வெளியாகியது. பாடலின் முழு வீடியோ ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்நிலையில் ஜெயம்ரவிக்கு பதிலாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
    • இதனைத் தொடர்ந்து 'தக் லைப்' படத்தில் கமல்ஹாசனுடன் விரைவில் அவர் நடிக்கிறார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.




    இப்படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இதையொட்டி கமல் ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்

    இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தி நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ,ஆகியோர் சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிப்பதற்கு படக்குழு வேறு நடிகர்களை தேடி வந்தது. அதை தொடர்ந்து சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசியது.

    இந்நிலையில் ஜெயம்ரவிக்கு பதிலாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அருண் விஜய் கையெழுத்திட உள்ளார்.

    தற்போது அருண்விஜய் பாலாவின் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து 'தக் லைப்' படத்தில் கமல்ஹாசனுடன் விரைவில் அவர் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×