நடிகரை திருமணம் செய்யும் டாடா பட நடிகை அபர்ணா தாஸ்

அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
நடிகரை திருமணம் செய்யும் டாடா பட நடிகை அபர்ணா தாஸ்
Published on

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருந்த Njan Prakashan என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் அபர்ணா தாஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகியிருந்த 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படத்தில் கவின், பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபக் பரம்போல் என்பவரை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறார். இவரும் நடிகர் தான். சமீபத்தில் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் இவர் நடித்திருக்கிறார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடித்த தீபக் பரம்போல்-அபர்ணா தாஸிற்கு ஏப்ரல் 24ஆம் தேதி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com