செய்திகள்

அ.தி.மு.க.வுடன் இணைவது தற்கொலைக்கு சமம்- டிடிவி தினகரன்

Published On 2018-12-22 06:47 GMT   |   Update On 2018-12-22 06:47 GMT
அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவது என்பது தற்கொலைக்கு சமமானது என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK

சென்னை, டிச. 22-

அம்மா மக்கள் முன் னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்- அ.தி.மு.க. விரைவில் இணையும் என சமூக வலைதளங்கள் உள்பட ஊடகங்களிலும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அது தவறானது. இரு கட்சிகளும் இணைவது சாத்தியமற்றது. தொண்டர்களின் உணர்வு களுக்கு மாறாக அவ்வாறு செய்வது தற்கொலைக்கு சமமானதாகும்.

அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத் தையும் மீட்டெடுக்க வேண் டியது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உரிமையாகும். அதன் பின்பு எந்தப் பெயரில் தொடர்வது என்பதை தொண்டர்களே முடிவு செய்வார்கள்.

கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு கட்சித் தலைமைகளே தவறான முடிவுகளை எடுக்கும்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் வீழ்ச்சியையே சந்திக்கும்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய பின்பு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வால் வளர்க்கப் பட்ட அ.தி.மு.க.வின் தொண்டர் களில் 90 சதவீதம் பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலேயே உள்ளனர். எங்கள் கட்சியின் தொண் டர்களை குழப்ப முயற்சிப்ப வர்களின் திட்டம் நிறை வேறாது.

மக்களவைத் தேர்தல் கூட்டணிகள் உருவாகும் முன் பாகவே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறி வித்து தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தது தவறானது. இந்தச் செயல் பா.ஜ.க.வுக்கு தி.மு.க. உதவி செய்வதைப் போலவே உள்ளது.

தி.மு.க. எப்போதுமே பாராளுமன்றத் தேர்தலில் ராஜதந்திரம் என்ற பெயரில் சந்தர்ப்பவாத அரசியல் செய்து தங்களது வளத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே அக்கறையாகச் செயல் படுவது மக்களுக்கு நன்கு தெரியும்.

தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர் தல் நடத்த வேண்டியது உள்ளது. ஆனால் எந்த தேர் தலையும் நடத்த ஆளுங்கட்சியினர் தயாராக இல்லை என்பதே உண்மை.

இருப்பினும் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு முதலில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் அம்மா மக்கள் முன் னேற்ற கழக வேட்பாளர் வெற்றியைப் பெறுவார்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

Tags:    

Similar News